சூரியகுமார் கிட்ட இந்த ஒன்ன நீங்க பாக்குறதே இல்ல.. இப்ப பிரச்சனையே கம்பீரின் அந்த முடிவு தான் – பார்த்திவ் படேல் பேட்டி

0
37
Parthiv

தற்போது இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் தடுமாறி வருவது, ஒரே ஒரு இன்னிங்ஸ் நன்றாக விளையாடினால் சரியாகிவிடும் என பார்த்திவ் படேல் கூறியிருக்கிறார்.

இந்திய அணி ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும் கூட அந்த தொடரில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டிங் சரியாக அமையவில்லை. அதேபோல ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் எதிர்பார்த்த அளவுக்கு அவர் பேட்டிங் இல்லை.

- Advertisement -

அவர் ரன் எடுக்க வேண்டும்

தற்போது இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரராக கில் இருப்பதும், மேலும் சூரியகுமார் யாதவிடம் இருந்து ரன்கள் வராததும் இந்திய அணிக்கு ஒரு தலைவலியாக மாறியிருக்கிறது. அபிஷேக் ஷர்மா ரன்கள் எடுத்தால் மட்டுமே இந்திய அணி பெரிய ஸ்கோர் எடுக்க முடியும் என்கின்ற நிலை இருக்கிறது.

இதுகுறித்து பேசி உள்ள பார்த்திவ் படேல் கூறும் பொழுது ” சூரியகுமார் யாதவ் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார் ஆனால் தற்போது அணியின் சிந்தனை மாறிவிட்டதால் நிலைமைகள் மாறியிருக்கின்றன. இதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் இது அவர் ரன்கள் எடுக்க வேண்டும் என்கின்ற விஷயத்தை மாற்றி விடாது. கேப்டனாக அவர் ரன் எடுக்க வேண்டும் என்று விரும்பப்படுவார். ஆனாலும் தற்போது உள்ள சூழ்நிலை அவரது கேப்டன் பதவியை பாதிக்காது”

- Advertisement -

இந்த விஷயத்தில் நன்றாக இருக்கிறார்

“மேலும் சூரியகுமார் யாதவிடம் நாம் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால், இப்போது அவருக்கு பார்ம் சரியில்லை ரன்கள் வருவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர் பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் கூட தடுமாறவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரே ஒரு இன்னிங்ஸ் அவரிடமிருந்து ரன் வந்து விட்டால் அவர் வெளியில் வந்து விடுவார்”

இதையும் படிங்க: 528 பந்து.. அபிஷேக் ஷர்மா படைத்த உலக சாதனை.. இந்திய கேப்டன் ரெக்கார்டு உடைந்தது.. அதிரடி தொடக்கம்

“மேலும் தற்போது பெரிய பிரச்சினையாக என்ன இருக்கிறது என்றால், மூன்றாவது இடத்தில் யார் பேட்டிங் செய்ய வருவார்கள் என்பது நிலையற்றதாக இருக்கிறது. எந்த ஒரு விஷயம்தான் இப்பொழுது அணிக்கும் சூரியகுமார் யாதவிற்கும் தனிப்பட்ட முறையில் பிரச்சினையாகவும் மாறி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -