ஏபி டிவில்லியர்ஸ் ப்ளீஸ் உதவி பண்ணுங்க.. நான் இந்த கிரிக்கெட் விளையாட என்ன செய்யணும்? – சூரியகுமார் யாதவ் கோரிக்கை

0
95
Surya

இந்தியா டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் வெளிப்படையாக தென் ஆப்பிரிக்க லெஜன்ட் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் இடம் ஒரு உதவி கேட்டு இருக்கிறார்.

தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் டி20 வடிவத்தில் மட்டுமே விளையாடி வருகிறார். 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு முடிந்துவிட்டது.

- Advertisement -

மோசமான முன்னுதாரணம்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த பேட்ஸ்மேனாக மதிப்பிடப்படும் சூரியகுமார் யாதவ் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளிலும் டக் அவுட் ஆன மோசமான சாதனை அவரிடம் இருக்கிறது.

தற்போது அவர் நல்ல திறமை இருந்தும் கூட ஒரு கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே விளையாடி மற்ற நேரங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டிலோ அல்லது ஓய்விலோ இருக்கிறார். எனவே டி20 மற்றும் ஒருநாள் வடிவத்தில் மிகச் சிறப்பான முறையில் விளையாடிய ஏபி டிவிலியர்ஸ் தனக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய வேண்டும் என சூரியகுமார் யாதவ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

உதவி செய்யுங்கள்

இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது ” நான் ஏபி டிவில்லியர்சை விரைவில் சந்தித்தால், அவர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இரண்டையும் எப்படி சமநிலைப்படுத்தி திறமையாக விளையாடினார் என்று கேட்க விரும்புகிறேன். நான் டி20 விளையாடும் முறையிலேயே ஒரு நாள் கிரிக்கெட்டையும் விளையாட நினைத்தேன். ஆனால் அவர் இரண்டு வடிவங்களிலும் வெற்றி பெற என்ன செய்தார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க : ஆஸி டி20 தொடர்.. குல்தீப்பை மட்டும் அனுப்பிட்டீங்க, இவரை ஏன் வச்சு இருக்கீங்க? கம்பீரை விமர்சித்த முன்னாள் வீரர்

“ஏபி டிவில்லியர்ஸ் இதை நீங்கள் கேட்கிறீர்கள் என்றால் தயவுசெய்து சீக்கிரத்தில் என்னை தொடர்பு கொள்ளுங்கள். ஏனென்றால் எனக்கு கிரிக்கெட்டில் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகள் முக்கியமானவை. நான் ஒருநாள் கிரிக்கெட்டையும் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். தயவு செய்து எனக்கு உதவுங்கள். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இரண்டையும் என்னால் சமநிலைப்படுத்த முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -