ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது, இந்திய அணியிலிருந்து ஷுப்மன் கில்லையும் குல்தீப் யாதவ் போல விடுவிக்க வேண்டுமா என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இரு அணிகளும் தொடரின் நடுவில் வீரர்களை விடுவித்து, முக்கியமான டெஸ்ட் தொடருக்காக வீரர்களை தயார் செய்து வருகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது 1-1 என்று சமநிலையில் உள்ளது. இன்னும் இரு போட்டிகள் உள்ளன. மூன்றாவது டி20க்கு முன்பு குல்தீப் இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள இரு போட்டிகளில் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியில் இருக்க மாட்டார்.
இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா “டிராவிஸ் ஹெட் இப்போது டி20ஐ தொடரிலிருந்து வெளியேறிவிட்டார். ஆஷஸ் வர இருப்பதால் அவர் சிவப்பு பந்துடன் பயிற்சி செய்யச் செல்கிறார். குல்தீப் யாதவும் வீட்டுக்குத் திரும்பிவிட்டார். ஏனெனில் அவர் இந்தியா ஏ அணியுடன் தென்னாஃப்ரிக்கா ஏ-க்கு எதிராக விளையாடி, சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு தயாராக வேண்டும்.
விசித்திரமான தொடர்:
“ஷுப்மன் கில்லையும் அனுப்பியிருக்கலாமா என்று நான் யோசிக்கிறேன். ஜோஷ் ஹேசல்வுட் ஏற்கனவே இல்லை. க்ளென் மேக்ஸ்வெல் இப்போது கிடைக்கலாம். ஆனால் டிராவிஸ் ஹெட் இருக்க மாட்டார். இது விசித்திரமான தொடர். இருதரப்பு தொடர் தான். ஆனால் உண்மையில் முக்கியமானதா? வேறு ஒரு தொடருக்காக வீரர்கள் விடுவிக்கப்பட்டால், இது அவ்வளவு முக்கியமில்லை என்று அர்த்தம். அப்படியென்றால் ஏன் விளையாடுகிறார்கள்?”
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டி20ஐ நவம்பர் 6, வியாழன் அன்று கராராவில் நடைபெறும். இறுதி டி20ஐ இரு நாட்களுக்குப் பின் பிரிஸ்பேனில் நடக்கும். இது குறித்து பேசிய ஆகாஷ், “ஷுப்மன் கில்லையும் விடுவிக்கலாம் என்று நினைத்தேன்.ஏனெனில் அவரது சுற்றுப்பயணம் நன்றாக இல்லை.”
” இது போன்ற இன்னிங்ஸ்கள் தொடர்ந்தால் அழுத்தம் அதிகரிக்கலாம். சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவரை நெருக்கி வருகிறார்கள்.”
தென்னாப்பிரிக்க தொடர் முக்கியம்:
“அவரை விடுவித்து சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு தயாராகச் சொல்லலாம். தேர்வாளர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் குல்தீப் யாதவை விளையாட விரும்பவில்லை என்றால், நீங்களும் செல்லலாம். தென்னாஃப்ரிக்காவுடனான இரு போட்டிகள் கொண்ட தொடர் மிக முக்கியமானது.”என்று சோப்ரா கூறினார்.
இதையும் படிங்க: ரூ.23 கோடி வீரரை வெளியே அனுப்பும் சன்ரைசர்ஸ்.. காவ்யா மாறன் எடுத்த அதிரடி முடிவு
தென்னாஃப்ரிக்காவை இலேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் ஆகாஷ் சோப்ரா எச்சரித்தார். அவர்கள் சமீபத்தில் பாகிஸ்தானில் ஒரு டெஸ்ட் வென்றுள்ளனர் மற்றும் தற்போதைய உலக சாம்பியன்கள். கடந்த ஆண்டு நியூசிலாந்து இலங்கையில் பிட்ச்களில் விளையாடி தயாராகி வந்து இந்தியாவை 3-0 என்று வீழ்த்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.






