நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் 8 சுற்றில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு நெருக்கடியான நேரத்தில் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. இதற்கு அடுத்து வந்த ரிஷப் பண்ட் 11 பந்தில் 20 ரன், சிவம் துபே 7 பந்தில் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதன் காரணமாக இந்திய அணி நெருக்கடியில் சிக்கிக்கொண்டது.
இப்படியான சூழலில் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தொடர்ந்து அதிரடியாகவே விளையாடினார்கள். சூரியகுமார் 28 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள், ஹர்திக் பாண்டியா 24 பந்தில் 32 ரன்கள் எடுத்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது.
இதை தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியால் இந்திய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியவில்லை. 20 ஓவர்களில் அந்த அணி 10 விக்கட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் 10 பேட்ஸ்மேன்களும் கேட்ச் மூலம் ஆட்டம் இழந்தார்கள். இதற்கு முன்பாக டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரே முறைதான் நடந்த பெற்றிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் அந்த போட்டியிலும் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்துக்கு எதிராக கேட்ச் மூலமாக ஆல் அவுட் ஆனார்கள். இரண்டு முறை நடைபெற்ற அரிதான நிகழ்வில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு முறையும் இடம் பிடித்திருக்கிறது.
இதையும் படிங்க : நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் – ரஷீத் கான் பேட்டி
இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற சாதனையை சூரியகுமார் யாதவ் படைத்திருக்கிறார். சூரியகுமார் யாதவ் வெறும் 64 போட்டிகளில் 15 முறையும், விராட் கோலி 124 போட்டிகளில் 15 முறை ஆட்டநாயகன் விருது வென்று இருக்கிறார்கள். இதற்கடுத்து விரன்தீப் சிங் 78 போட்டியில் 14, சிக்கந்தர் ராஸா 86 போட்டியில் 14, முகமது நபி 126 போட்டியில் 14 முறை ஆட்டநாயகன் விருது வென்று இருக்கிறார்கள்.