தற்போது இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரை சூரியகுமார் தலைமையில் வென்று இருக்கிறது. அடுத்து இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை சந்திக்க இருக்கும் நிலையில், சூரியகுமார் யாதவ் வித்தியாசமான விருப்பம் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.
சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 எனக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் ரோகித் சர்மா தலைமையில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி களம் இறங்குகிறது.
இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருந்த கேப்டன் சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஜெய்ஸ்வால் போன்ற சில முன்னணி வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம் பெறவில்லை. எனவே இவர்கள் எல்லோரும் இந்தியாவிற்கு உடனடியாக திரும்புகிறார்கள்.
டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பிறகு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முதல் தொடரில் விளையாட இருக்கிறார்கள். மிக முக்கியமாக இவர்கள் இருவரும் கவுதம் கம்பீர் பயிற்சியின் கீழ் விளையாட இருக்கும் முதல் தொடராகும். இந்த காரணத்தினால் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
ரோகித் சர்மாவை பொறுத்தவரை எப்பொழுதும் களத்திற்கு உள்ளே வெளியே என நகைச்சுவையாக பேசி வீரர்களை வழி நடத்துவது வழக்கம். மேலும் களத்தில் ஸ்டெம்ப் மைக்கில் கேட்கும்படி பேசும் அவருடைய ஒன் லைன் நகைச்சுவைகள் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பிரபலமானவை.
இதையும் படிங்க: சூர்யா என்ன சொல்றீங்க.. அப்ப இதுக்கு முன்னாடி உங்க டீம்ல எப்படி இருந்திங்க?.. அஜய் ஜடேஜா விமர்சனம்
தற்போது இது குறித்து கூறியிருக்கும் சூரியகுமார் யாதவ் “ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு ஆல் தி பெஸ்ட். ரோகித் பாய் நான் உங்களுக்காக முழு தொடரையும் பார்ப்பேன்.நீங்கள் ஸ்டெம்ப் மைக் அருகில் இருப்பீர்கள் என எனக்கு தெரியும்.உங்களுடைய ஒன் லைனருக்காக காத்திருக்கிறேன். இந்த அணியில் பல புதியவர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். எனவே பல ஒன் லைனர்கள் உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






