என் கேப்டன்சிய புடுங்கி.. கில் கிட்ட குடுத்துடுவாங்கனு பயமா இருக்கு – சூரியகுமார் யாதவ் வெளிப்படை பேச்சு

0
151
Gill

தற்போது சுப்மன் கில்லுக்கு தன்னிடமிருந்து டி20 கேப்டன் பதவியை பறித்துக் கொடுத்து விடுவார்கள் என பயமாக இருப்பதாக சூரியகுமார் யாதவ் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

மூன்று வடிவ இந்திய அணிகளில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு கில் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். டி20 வடிவத்திற்கு மட்டும் சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார்.

- Advertisement -

கில்லால் உண்டான நெருக்கடி

ஐபிஎல் தொடருக்கும் முன்பாக சூரியகுமார் யாதவ் பார்ம் மோசமாக இருந்தது. பிறகு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி திரும்பி வந்தார். ஆனால் ஆசியக் கோப்பை தொடரில் மீண்டும் அவருடைய பேட்டிங் ஃபார்ம் மோசமாக அமைந்தது. இதனால் அவருடைய இடத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது.

மேலும் இந்திய டி20 அணிக்கு புதிய துணை கேப்டனாக சுப்மன் கில் கொண்டுவரப்பட்டதால், சூரியகுமாரின் கேப்டன் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து சூரியகுமார் யாதவ் சரியாக செயல்படாவிட்டால் மூன்று வடிவ கிரிக்கெட் அணிகளுக்கும் சேர்த்து கில் கேப்டன் ஆக்கப்பட்டு விடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

பயம் இருப்பது உண்மை

இது குறித்து சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது “கில் இரண்டு வடிவங்களில் கேப்டன் ஆனதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. அவர் குறித்த பயம் இருக்கிறது. கேப்டன் பொறுப்பு அவரிடம் போகலாம். இந்த வகையான பயம் தான் எனக்கு நன்றாக விளையாட உந்துதலாக இருக்கிறது”

இதையும் படிங்க : சச்சின் சங்கக்கரா சாதனைகளுக்கு சோதனை.. விராட் கோலிக்கு காத்திருக்கும் 3 ரெக்கார்டு.. ஆஸி தொடரில் சாதிப்பாரா?

“எனக்கும் கில்லுக்குமான நட்பு களத்தில் வெளியிலும் மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர் எப்படிப்பட்ட வீரர் மற்றும் மனிதர் என்று எனக்கு தெரியும். எனவே அது என்னை சிறப்பாக செயல்பட தூண்டுகிறது. நான் அவருக்காக மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -