நேற்று ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி குறித்து இந்திய கேப்டன் சூரியக்குமார் யாதவ் அசத்தலாக ஒரே வரியில் பதில் அளித்திருக்கிறார்.
நாளை இரண்டாவது சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இது குறித்து நிகழ்ச்சி வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு இந்திய கேப்டன் சூரியகுமார் யாதும் ஒரே வரியில் பதில் அளித்து அசத்தியிருக்கிறார்.
திடீரென அதிகரித்த எதிர்பார்ப்பு
முதல் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காதது பெரிய சர்ச்சையாக மாறிவிட்டது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணி மற்றும் போட்டி நடுவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு ஐசிசி இடம் சென்று பரபரப்பை அதிகரித்தது.
இந்த நிலையில் கிரிக்கெட் விதிகளில் இதற்கு தண்டனை அளிக்க எந்த சட்டமும் இல்லை என ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில் முதல் போட்டியில் நாளை விளையாட இருப்பதால் எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகரித்து இருக்கிறது.
சூரியகுமார் தந்த பதில்
நேற்று ஒமான் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ” பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு எல்லாம் தயாராகி விட்டதா?” என்று கேப்டன் சூரியகுமார் யாதவிடம் கேட்டார். அதற்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் ஒரே வரியில் “சூப்பர் 4 சுற்றுக்கு எல்லாம் தயாராக இருக்கிறது” என்று பதிலளித்து, பாகிஸ்தான் போட்டியின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டார்.
இதையும் படிங்க : ஒமான் பவுலரை பார்த்து ஷாகின் திருந்தனும்.. நாளைக்கு கில்லை இப்படி ஈசியா தூக்கலாம் – வாசிம் அக்ரம் அறிவுரை
மேலும் சிறப்பாக விளையாடிய ஒமான் அணியை பாராட்டிய சூரியகுமார் யாதவ் “நான் அடுத்த போட்டியில் நிச்சயமாக களம் இறங்கி விளையாடுவேன். அதே சமயத்தில் எங்களுக்கு எதிராக ஒமான் அணி மிகச் சிறப்பாக விளையாடியது. அவர்கள் அப்படி விளையாடுவதை பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. ஹர்திக் பாண்டியா அவுட் ஆன விதத்தில் அவர் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருப்பார். மற்றபடி எங்கள் அணி முற்றிலுமாக போட்டிக்கு தயாராக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






