நேற்று ஒமான் பந்துவீச்சாளர் கில்லை கிளீன் போல்ட் செய்தது போல ஷாகின் அப்ரிடி செய்ய வேண்டும் என வாசிம் அக்ரம் அறிவுரை கூறியிருக்கிறார்.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் இறுதிப்போட்டியில் இந்தியா ஒமான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கில் எட்டு பந்துகளை சந்தித்து ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
அபாரமான இன் ஸ்விங்
ஒமான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வீசிய இன் ஸ்விங் பந்துவீச்சை அடிக்க முடியாமல் கில் நேராக விளையாட முயற்சி செய்து பந்து உள்ளே வந்ததால் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த சஞ்சு சாம்சன் இதே மாதிரியான பந்துகளுக்கு தடுமாறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாகின் அப்ரிடி இந்த பந்துகளை வீசுவதில் மிகவும் திறமையானவராக இருந்தார். ஆனால் தற்போது அவர் இந்த மாதிரியான லென்த்தில் வீசாமல் தொடர்ந்து யார்க்கர்களாக வீசி ஆரம்பத்திலேயே ரன்கள் கொடுத்து தனக்கும் அணிக்கும் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்.
இதை செய்ய வேண்டும்
இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசும் பொழுது “ஒமான் பவுலர் போல ஷாகின் அப்ரிடி ஆரம்பத்தில் இதை செய்ய வேண்டும். அவருடைய பந்து வீச்சு திட்டம் என்ன என்பது குறித்து உலகம் முழுவதும் அறிந்து வைத்திருக்கிறது. அவர் எடுத்ததும் யார்க்கர்களை வீசுவார் என எல்லோருக்கும் தெரியும். எனவே அவருக்கு ஒரு பி பிளான் இருக்க வேண்டும். அவர் பந்து வீச வேண்டிய லென்த் இதுதான்”
இதையும் படிங்க : 38 ரன்ல அவுட் ஆகுறார்னு திட்டாதீங்க.. அதுக்கு காரணமே இந்திய அணியின் இந்த பிளான்தான் – அபினவ் முகுந்த் பேட்டி
” ஒரு யார்க்கர் பரவாயில்லை ஆனால் ஒரு ஓவரில் அதை தாண்டி தொடர்ந்து அப்படியே வீசுவது சரியாக இருக்காது. அதில் ஒரு பந்து தவறுதலாக விழுந்தால் கூட பவர் பிளேவில் பவுண்டரி போய்விடும். இதனால் அவருக்கு எடுத்ததும் அழுத்தம் உருவாகிவிடுகிறது. எனவே அவர் இந்த லென்த்தில் சில பந்துகளை கலந்து வீசுவது சரியாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.






