ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 56வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி விளையாடி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூரியகுமார் யாதவ் சச்சின் டெண்டுல்கரின் ரெக்கார்டை முறியடித்து சாதனை படைத்திருக்கிறார்.
மும்பை குஜராத் மோதல்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி மும்பை அணி தனது பேட்டிங் களம் இறங்கிய நிலையில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரிக்கல்டன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 2 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 7 ரன்னில் நடையை கட்டினார்.
அதற்குப் பின்னர் களம் இறங்கிய வில் ஜாக்ஸ் மற்றும் சூரியகுமார் யாதவ் ஜோடி சிறப்பாக விளையாடி மும்பை அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 43 பந்துகளில் 71 ரன்கள் குவித்தது. இதில் 24 பந்துகளை எதிர்கொண்டு 5 பௌண்டரிகளுடன் 35 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சூரியகுமார் யாதவ் எதிர்பாராத விதமாக சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
சாதனை படைத்த சூர்யா
35 ரன்கள் குவித்த நிலையில் சூரியகுமார் யாதவ் இந்த ஐபிஎல் போட்டியில் 500க்கும் அதிகமான ரன்கள் குவித்திருக்கிறார். இதன் மூலமாக 3 முறை ஐபிஎல் தொடரில் 500க்கும் அதிகமான ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரான மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 2010 மற்றும் 11ஆம் ஆண்டுகளில் 500க்கும் அதிகமான ரன்கள் குவித்திருந்தார்.
இதையும் படிங்க:தோனியின் மோகத்தை அடக்க கேகேஆர்க்கு நல்லா தெரியும்.. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.. கொல்கத்தா கோச் பேட்டி
சச்சின் டெண்டுல்கர் 2 முறை இதை செய்திருந்த நிலையில் தற்போது சூரியகுமார் யாதவ் 2018, 23, 25 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை 500க்கும் அதிகமான ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பேட்டிங்கில் மும்பை அணியின் வில் ஜாக்ஸ் 35 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்கள் குவித்து வெளியேறி இருக்கிறார். சற்று முன்பு வரை மும்பை இந்தியன்ஸ் அணி 16.4 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது






