நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பிரதான வேக பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் இருந்து வருகிறார்கள். இந்த ஜோடியின் பவர் பிளே மற்றும் இறுதி கட்ட பந்துவீச்சு இந்திய அணிக்கு நல்ல தாக்கத்தை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் சீனியர் வீரர் பும்ரா பவுலிங் பற்றி அர்ஸ்தீப் சிங் கூறியிருக்கிறார்.
இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ரா தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். ஆடுகளம் எப்படி இருந்தாலும் அதற்கேற்றபடி உடனே மாறி விக்கெட்டுகளை கைப்பற்றுவதோடு மிகவும் சிக்கனமாகவும் வந்து பேசுகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டிராவிஸ் ஹெட் என முக்கிய விக்கெட்டுகளை முக்கிய நேரத்தில் எடுத்து அணியை தனி வீரராக வெற்றி பெற வைக்கிறார்.
மேலும் பும்ரா பந்துவீச்சு மிகவும் சிக்கனமாக இருக்கிறது. அவரை அடித்து விளையாட முடியாத காரணத்தினால் மற்ற பந்து வீச்சாளர்களை அடிப்பதற்கு சென்று அவர்களுக்கு விக்கெட்டுகளை கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தம்முடைய பந்துவீச்சுக்கு பும்ரா எந்த வகையில் உதவியாக இருந்து வருகிறார்? என்று அர்ஸ்தீப் சிங் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அர்ஸ்தீப் சிங் கூறும்பொழுது “எனக்கு தற்பொழுது பந்துவீச்சு கடினமாக இல்லை. பும்ரா பாய் வந்து பேசுவது எனக்கு வீடியோ கேம் மாதிரி இருக்கிறது. குறிப்பாக அவர் அவ்வளவு சிக்கனமாக பந்து வீசுவதை பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது.
பும்ரா பாய் இவ்வளவு சிக்கனமாக இருப்பதால், பேட்ஸ்மேன்கள் தங்கள் மீது இருக்கும் அழுத்தத்தை எடுக்க, என் பந்துவீச்சை அடிக்க முயற்சி செய்கிறார்கள். அதனால் அவர்கள் ஆபத்தான ஷாட்டுக்கு சென்று எனக்கு விக்கெட்டுகள் கொடுக்கிறார்கள். இதனால் எல்லா பெருமையும் பும்ரா பாய்க்கு சேரும்.
இதையும் படிங்க : நாளை இந்தியா இங்கிலாந்து செமி-பைனல்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. ரோகித் அந்த மாற்றத்தை செய்வாரா?
மேலும் எங்கள் அணியில் இருக்கும் மற்ற பந்துவீச்சாளர்களும் எனக்கு உதவி செய்கிறார்கள். அனைவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்து வீசுகிறார்கள். ஒருவர் ஒரு முனையில் சிக்கனமாக வீசி அழுத்தம் கொடுக்க, இன்னொருவர் விக்கெட்டுகளை கைப்பற்ற பந்து வீசி விக்கெட் எடுக்கிறார். எனவே பவுலர்களாக அனைவரும் கிளிக் ஆகிறார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவும் நன்றாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.