கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

சூரியகுமார் ரன் அவுட்.. 2 பந்து முன் கோலி செய்த செயல்.. காரணத்தை தெளிவாக விளக்கிய ரசிகர்.!

நடப்பு உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தர்மசாலாவில் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை மீண்டும் வீழ்த்தி இருக்கிறது இந்தியா.

- Advertisement -

முன்னதாக இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்ச்சல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 273 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து 274 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியாவிற்கு ரோஹித் சர்மா சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் 191 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆறாவது விக்கெட்டுக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வெற்றிக்கு வழி நடத்திச் சென்றனர். விராட் கோலி 104 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரவீந்திர ஜடேஜா 39 ரன்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

நேற்றைய போட்டியின் போது ஆட்டத்தின் திருப்பு முனையாக ஒரு சம்பவம் நடைபெற்றது.33-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் சூரியகுமார் யாதவ் கவர் திசையில் பந்தை தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க முயன்றார் . இதற்காக அவர் ஆடுகளத்தின் பாதி வரை ஓடிவந்த பின் விராட் கோலி அவரை திரும்ப செல்லுமாறு கூறினார். அப்போது சான்ட்னரின் சிறப்பான ஃபீல்டிங்கால் சூரியகுமார் யாதவ் ரன் அவுட் செய்யப்பட்டார். இது தொடர்பாக பலரும் அது விராட் கோலியின் தவறு தான் என அவர் விமர்சனம் செய்து வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் ரசிகர் ஒருவர் அதற்கு பதில் அளிக்கும் விதமாக சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழந்த விதம் குறித்து தெளிவாக விளக்கி இருக்கிறார். நேற்றைய போட்டியில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றாலும் சூரியகுமார் யாதவ் ரன் அவுட் செய்யப்பட்ட விதத்தில் ஒரு சிலர் விராட் கோலியை குறை கூறி வந்தனர். ஏனென்றால் இந்த உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததால் சூரியகுமார் யாதவிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுவும் இந்த ரன் அவுட் மூலம் முடிவடைந்ததால் அதிருப்தியில் இருந்த ரசிகர்கள் அவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

இதற்கு நியாயமான காரணத்தை தற்போது ரசிகர் ஒருவர் விலக்கி இருக்கிறார். இது தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருக்கும் சரண் என்ற அந்த ரசிகர்” விராட் கோலியின் தவறு சூரியகுமார் யாதவ் ரன் அவுட் ஆன பந்தில் இல்லை. அதற்கு இரண்டு பந்துகளுக்கு முன்பாக ஃபீல்டரின் கைகளில் பந்தை அடித்து விட்டு விராட் கோலி ஒரு ரன் எடுக்க முயல்வார். அப்போது சூரியகுமார் யாதவ் பந்து பீல்டரின் கைகளில் இருக்கிறது என்பதால் ரன் எடுக்கும் வாய்ப்பை மறுத்து விடுவார் . இது குறித்து விராட் கோலி ஒரு ரன் எடுத்திருக்கலாம் என சூரியகுமார் யாதவிடம் விவாதிப்பார்

இதற்கு இரண்டு பந்துகள் கழிதஇதற்கு இரண்டு பந்துகள் கழித்து ஃபீல்டரின் கைகளில் பந்தை அடித்துவிட்டு சூரியகுமார் யாதவ் ஒரு ரன் எடுக்க முயற்சிப்பார் . ஆனால் அந்தப் பந்தில் விராட் கோலி செய்தது சரிதான்.அவர் பந்து ஃபில்டரை கடந்து செல்கிறதா என்பதை பார்த்து தான் அந்த ரன் எடுக்கும் வாய்ப்பை மறுத்தார். இதனால் சூரியகுமார் யாதவ் ரன் அவுட் ஆனார். இதில் விராட் கோலியின் தவறு எதுவுமில்லை என பதிவு செய்திருக்கிறார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி இருக்கிறது

- Advertisement -
Published by