சூரியகுமார் தான் உலககோப்பைக்கு கீ பிளேயர்; அவசரப்பட்டு டீமை விட்டு தூக்கிடாதீங்க – ரிக்கி பாண்டிங் கருத்து!

0
150

சூரியகுமார் யாதவ் வருகிற உலகக்கோப்பைக்கு கீ ப்ளேயராக இருப்பார். தொடர்ந்து வாய்ப்பு கொடுங்கள் என்று பேசியுள்ளார் ரிக்கி பாண்டிங்.

இந்திய அணியின் மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்பட்டு வரும் சூரியகுமார் யாதவ், கடந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அசத்தினார். டி20 போட்டிகளில் கிட்டத்தட்ட 1200 ரன்கள் அடித்து வரலாறு படைத்தார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் அடங்கும். நம்பர் ஒன் டி20 வீரராகவும் உயர்ந்தார்.

- Advertisement -

ஒருநாள் போட்டிகளில் அசத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்தாண்டு துவக்கத்தில் முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகி இருந்தபோது, சூரியகுமார் யாதவிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இந்த வாய்ப்புகளை சூரியகுமார் யாதவ் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

கடந்த ஆண்டு இருந்த பார்மை இந்த வருடம் தொடர முடியவில்லை. முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சற்று சொதப்பினார். இருப்பினும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

அதில் வரலாறு காணாத வகையில், மூன்று போட்டிகளில்மூன்று கோல்டன் டக் ஆகி மிகமோசமான விமர்சனத்திற்கு உள்ளானார். இப்படி ஒரு பார்மில் இருந்தபடியே ஐபிஎல் போட்டிகளுக்கும் வந்திருக்கிறார்.

முதல் இரண்டு லீக் போட்டிகளில் 15 ரன்கள் மற்றும் ஒரு ரன் என அடுத்தடுத்த ஆட்டம் இழந்து டி20 யிலும் மோசமான பார்மில் இருக்கிறார். இப்படியே போனால் இந்த வருட 50 ஓவர் உலகக்கோப்பையில் சூரியகுமார் யாதவிற்கு இடம் இல்லாமலே போய்விடும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சூரியகுமார் யாதவிற்கு ஆதரவாக பேசியுள்ள ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கூறுகையில், “கிரிக்கெட் பார்க்கும் அனைவருக்கும் தெரியும் சூரியகுமார் யாதவ் வெள்ளை-பந்து போட்டிகளில் எப்படி ஆடக்கூடியவர் என்று. ஆகையால் இந்திய அணி நிர்வாகம் அவருடன் இருக்க வேண்டும். என்னை பொருத்தவரை, சூரியகுமார் யாதவ் தான் இந்திய அணிக்கு உலகக்கோப்பை பெற்று தரக்கூடிய வீரராக இருப்பார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆட்டத்தை மொத்தமாக மாற்றக் கூடியவர். அவரைபோன்றோர் அணிக்கு அவசியம் தேவை.” என்றார்.

மேலும் பேசிய ரிக்கி பாண்டிங் “உலகக்கோப்பை அணியில் கேஎல் ராகுல் கட்டாயம் இருப்பார் என்று தெரிகிறது. அதேநேரம் இசான் கிஷன் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும். நல்ல கீப்பிங் ஆப்ஷன் மற்றும் இடது கை பேட்ஸ்மேன். டாப் ஆர்டரில் இந்தியாவிற்கு இருக்கும் ஒரே இடதுகை பேட்ஸ்மேன்.” எனவும் கூறினார்.

- Advertisement -