இன்று இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அதிரடியாக விளையாட இந்திய அணி ரன் குவித்து அசத்தியிருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் சிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இடம் பெறவில்லை. ரியான் பராக் மற்றும் ரிங்கு சிங் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் சுழல் பந்துவீச்சாளர்களாக அக்சர் படேல் மற்றும் ரவி பிஸ்னாய் இருவரும் இடம் பெற்றார்கள்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியான துவக்கம் தந்தார்கள். துணை கேப்டன் கில் 16 பந்துகளில் 34 ரன்கள், ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்கள். கேப்டன் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா 10 பந்துகளில் 9 ரன்கள், ரியான் பராக் 6 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். ஆரம்பத்தில் பொறுமை காட்டி விளையாடிய ரிஷப் பண்ட் இறுதியில் அதிரடி காட்டி 33 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.
கடைசிக் கட்டத்தில் ரிங்கு சிங் இரண்டு பந்தில் ஒரு ரன் எடுத்து வெளியேறினார். அக்சர் படேல் ஆட்டம் இழக்காமல் 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் பதிரனா நான்கு ஓவர்களுக்கு 40 ரன்கள் தந்து 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க: பிரித்வி ஷா கிட்ட எவ்வளவோ பேசிட்டேன்.. இந்த காரணத்தால்தான் வாய்ப்பு தரலை – ரிக்கி பாண்டிங் விளக்கம்
இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் 230 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி தள்ளி இருந்தா. முழு உறுப்பினர் நாடுகளுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதங்களை 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் அடித்தவர்கள் என்கின்ற சாதனையை சூரியகுமார் படைத்திருக்கிறார். அவருக்கு இது 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் ஒன்பதாவது சர்வதேச அரை சதம் ஆகும். இரண்டாவது இடத்தில் மேக்ஸ்வெல் இருக்கிறார்.