இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்துள்ள ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு நன்றி தெரிவிப்பதாக சுரேஷ் ரெய்னா கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரர்கள் தற்பொழுது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்கு தயாராகி வருகிறார்கள். மேலும் இந்த காலகட்டத்தில் அவர்கள் டி20 கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து இருக்கிறார்கள். மேலும் உள்நாட்டில் ரஞ்சி டிராபியில் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி
கடந்த வாரங்களில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த அணியில் மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அதே வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டி20 கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு அறிமுகமானார். ஆனால் இதுவரையில் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அறிமுகமாகும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேரடியாக அவரை ஐசிசி தொடருக்கு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இந்திய தேர்வுக்குழு தேர்வு செய்திருக்கிறது.
ரோகித் சர்மாவுக்கு ஹாட்ஸ் ஆஃப்
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசும் பொழுது “ஜெய்ஸ்வாலை பார்க்கும்பொழுது அவர் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அவர் கதையை எடுத்துக் கொண்டு பார்க்கும் பொழுது அவர் இந்த நிலைக்கு மிகவும் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு ஒருநாள் போட்டியில் கூட விளையாடாத அவரை நேரடியாக சாம்பியன்ஸ் டிராபிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். இதற்காக தேர்வு குழு மற்றும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை நான் மிகவும் பாராட்டுகிறேன்”
இதையும் படிங்க : ஏபி டிவிலியர்ஸ்க்கு அடுத்து இந்த விஷயத்தில் ரிஷப் பண்ட்தான்.. அவர் இதை செய்யணும் – ஆகாஷ் சோப்ரா கருத்து
“ஜெய்ஸ்வாலை பொருத்தவரை அவருடைய மனோபாவம் மற்றும் பொறுமை ஆகியவை சிறப்பானவை. அவர் மிகவும் தயாராக இருக்கிறார் என்று தெரிகிறது. இந்திய கிரிக்கெட்டின் அழகே இதுதான். அதாவது நீங்கள் ஒரு விஷயத்தை செய்வதற்கு தயாராக இருக்கும் பொழுது, உங்களைச் சென்று அந்த விஷயத்தை செய்ய சொல்வதற்கு ஒருவர் இருப்பார். தற்போது ஜெய்ஸ்வால் விஷயத்தில் ரோகித் சர்மா அவ்வாறான காரியத்தை செய்திருக்கிறார்” என்று பாராட்டி கூறியிருக்கிறார்.






