ஏபி டிவிலியர்ஸ்க்கு அடுத்து இந்த விஷயத்தில் ரிஷப் பண்ட்தான்.. அவர் இதை செய்யணும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
86
Rishabh

ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஏபி டிவிலியர்ஸ்க்கு அடுத்த இடத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் மிகச் சிறந்தவராக இருக்கிறார் என்று இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

தற்போது ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணிக்கு மிக அதிகபட்ச விலையான 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட் வாங்கப்பட்டு இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அந்த அணிக்காக தொடக்க ஆட்டக்காரராகவும், எதிர்காலத்தில் இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராகவும் ரிஷப் பண்ட் இருக்க வேண்டுமா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா விரிவான பதில் தந்திருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் சொன்ன பதில்

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” இதுகுறித்து யாரோ ரிஷப் பண்ட் இடம் கேள்வி எழுப்பிய பொழுது அதற்கு அவர் பதில் அளித்து இருந்தார். அந்த பதிலை நான் கேட்டிருந்தேன். அப்பொழுது தனக்கு எந்த இடம் சரியானது என்பது முக்கியமில்லை, மணிக்கு தான் எந்த இடத்தில் விளையாடுவது சரியாக இருக்கும் என்பது தான் முக்கியம் என்று அவர் கூறியிருந்தார்”

“ஐபிஎல் தொடரில் அவருக்கு நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் புள்ளி விவரங்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. நான் இது குறித்து ஐபிஎல் தொடரிலிருந்து அவருடைய புள்ளி விபரங்கள் சிலவற்றை எடுத்தேன். அது ஏபி டிவில்லியர்ஸ் புள்ளி விவரங்களுக்கு அடுத்தபடியாக மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர் இடத்தில் விளையாட மிகவும் வசதியாக இருக்கிறார்”

- Advertisement -

ரிஷப் பண்ட் கடினமானதை செய்கிறார்

“உண்மையில் பேட்டிங் ஆர்டரின் தொடக்கத்தில் விளையாடுவது மிகவும் வசதியானது. ஏனென்றால் உங்களுக்கு ஆறு ஓவர்கள் பவர் பிளே இருக்கிறது. மேலும் இரண்டு பீல்டர்கள் மட்டுமே வெளியே இருப்பார்கள். உங்களுக்கு ரன் எடுப்பது எளிமையானது. ஆனால் மிடில் வரிசையில் பேட்டிங் செய்வது கடினமானது. ஏனென்றால் நீங்கள் போட்டியை முடித்தாக வேண்டும்”

இதையும் படிங்க: முதல் 9 ஓவரில் சதம் அடித்த வீரர்.. வார்னர் அணி பிக் பாஷ் பைனலில் தோல்வி.. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் சாம்பியன்

“உங்களுக்கு திறமை இருந்தால், நீங்கள் ஒரு இடதுகை ஆட்டக்காரராக இருந்தால், நீங்கள் மிடில் வரிசையில் விளையாடுவதை வசதியாக உணர்ந்தால், நீங்கள் நிச்சயமாக நம்பர் நான்கு அல்லது ஐந்தாம் இடத்தில்தான் பேட்டிங் செய்ய வேண்டும். எனவே ரிஷப் பண்ட் லக்னோ மற்றும் இந்திய அணிக்காக மிடில் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -