தோனிக்குப் பின் இந்த வீரர்களில் ஒருவர் தான் கேப்டனாக செயல்பட வேண்டும் – சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்

0
68
MS Dhoni and Suresh Raina

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வருகிற சனிக்கிழமை இரவு அன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. சென்னை அணி வீரர்கள் அனைவரும் தற்போது மும்பையில் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

சென்னை அணியின் ஆஸ்தான வீரர் சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு முதல் முறையாக சென்னை அணியில் விளையாடப் போவது இல்லை. சுமார் 12 ஆண்டுகளாக சென்னை அணிக்கு விளையாடிய சுரேஷ் ரெய்னா சென்னை அணி வெற்றி பெற்ற மூன்று வருடங்கள் 2010,2011 மற்றும் 2018இல் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

இருப்பினும் கடந்த ஆண்டு அவர் சரியாக விளையாடாத காரணத்தினால் அவரை சென்னை அணி இந்த ஆண்டு கைப்பற்றவில்லை. நடந்து முடிந்த மெகா ஏலத்தில் கூட அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. இதனையடுத்து நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா புதிய பணியை செய்ய காத்திருக்கிறார்.

சென்னை அணியின் கேப்டன் பதவிக்கு இந்த வீரர்கள் சரியாக இருப்பார்கள்

மகேந்திர சிங் தோனிக்கு தற்பொழுது வயது 40. ஏறக்குறைய இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டுடன் அவர் ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளது. எனவே அவருக்கு அடுத்தபடியாக சென்னை அணியின் கேப்டன் பதவிக்கு எந்த வீரர் சரியாக இருப்பார் என்கிற கணிப்பை தற்போது சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

டோனிக்கு அடுத்தபடியாக பிராவோ சரியான தேர்வாக இருப்பார். பல்வேறு டி20 போட்டிகளில் அவர் விளையாடுகிறார் அதேசமயம் கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் அவரது தலைமையிலான அணி வெற்றி பெற்றிருக்கிறது. பிரவோவுக்கு அடுத்தபடியாக ஜடேஜா தற்போது சர்வதேச அளவில் சரியான பார்மில் இருக்கிறார். எனவே அவரும் கேப்டன் பதவிக்கு போட்டியிடலாம்.

- Advertisement -

இவர்களைத் தொடர்ந்து ராபின் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோரும் டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டியில் மிக சிறப்பாக விளையாடும் வீரர்கள். இவர்களுக்கும் நிறைய அனுபவம் உள்ள காரணத்தினால் இவர்களும் கேப்டன் பதவிக்கு சரியான தேர்வாக இருப்பார்கள். எனவே இந்த நான்கு வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாக பதவி ஏற்றால் சிறப்பாக இருக்கும் என்று சுரேஷ் ரெய்னா தற்பொழுது கணித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்

மேலும் பேசிய சுரேஷ் ரெய்னா மும்பையில் உள்ள வான்கடே மைதானம் மற்றும் புனேவில் உள்ள மைதானங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நேரம் செல்லச்செல்ல ஈரப்பதம் ஆகலாம். எப்பொழுதும் நாம் டாஸ் வென்று முதலில் பந்து வீசி விடலாம் என்கிற நம்பிக்கையில் இருக்க முடியாது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசிட நேர்ந்தால் மைதானத்தில் உள்ள ஈரப்பதம் நிச்சயமாக மிகப்பெரிய சவாலாக அமையும். எனவே சென்னை அணி பந்துவீச்சாளர்கள் அதனை கருத்தில் எடுத்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு தயாராக வேண்டும் என்று கூடுதல் ஆலோசனை கூறியுள்ளார்.