இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் துவங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி என்ன செய்தால் பேட்டிங் வரிசை வலிமையானதாக மாறும் என சுரேஷ் ரெய்னா அறிவுரை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பான வீரர்கள் உள்ளடக்கி கோப்பையை வென்றது. ஆனால் கடந்த ஆண்டு சிறந்த வீரர்களை எல்லாம் வெளியில் விட்டு சிக்கிக் கொண்டது. அவர்களுக்கு கடந்த ஆண்டு மோசமாக ஐபிஎல் தொடரில் அமைந்தது.
வீணடிக்கப்பட்ட வீரர்
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரிங்கு சிங் மிகவும் கீழே தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தார். சில நேரங்களில் அவர் ஐந்தாவது இடத்தை தாண்டி அனுப்பப்பட்டார். அவரை ஒரு ஃபினிஷர் ஆக மட்டுமே அணி நிர்வாகம் பார்த்தது.
இதன் காரணமாக அவருக்கு நிறைய நேரம் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்புகளும் குறைவானதாகவே இருந்தது. இதன் காரணமாக அவருடைய பேட்டிங் ஃபார்ம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பிறகு உத்திரபிரதேச t20 லீக்கில் சிறப்பாக விளையாடி சரி செய்து கொண்டு இந்திய அணிக்கு வந்தார்.
சுரேஷ் ரெய்னா அறிவுரை
இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசும்பொழுது “கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரன் ரேட் சிறப்பாக அமையவில்லை. ரகானே மேல் வரிசையில் சிறப்பாக விளையாடினார். ஆனால் அவர்களுக்கு மிடில் ஆர்டர் சிறப்பாக அமையவில்லை. ரசல், ரிங்கு சிங், ரமன்தீப் சிங் என மூன்று பேருமே மிகவும் கீழே வந்தார்கள்”
இதையும் படிங்க : இப்பதான் இந்திய அணியின் அந்த திறமை வெளியே வருது.. கம்பீர் சூர்யா செஞ்ச அந்த வேலை பெருசு – ராகுல் டிராவிட் பாராட்டு
“ரிங்கு இந்த முறை பேட்டிங் வரிசையில் மேலே வர வேண்டும். அவர் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வரலாம். ஏனென்றால் பந்தை பார்த்து சுற்றக்கூடிய சாதாரண பேட்ஸ்மேன் கிடையாது. அவர் முறையான பேட்ஸ்மேன். அவர் அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். அவரால் நீண்ட நேரம் நின்று விளையாட முடியும்” என்று கூறி இருக்கிறார்.






