இப்பதான் இந்திய அணியின் அந்த திறமை வெளியே வருது.. கம்பீர் சூர்யா செஞ்ச அந்த வேலை பெருசு – ராகுல் டிராவிட் பாராட்டு

0
4
Dravid

நேற்று நடந்த கிரிக்கெட் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேப்டன் சூர்யா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோரை பாராட்டி பேசி இருக்கிறார்.

ராகுல் டிராவிட் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வென்றார். இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்த கம்பீர் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை வென்றிருக்கிறார்.

- Advertisement -

சஞ்சுவை பார்க்க மகிழ்ச்சி

ராகுல் டிராவிட் பயிற்சி காலத்தில் சஞ்சு சாம்சன் இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்டார். டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் அப்போது அவர் இடம்பெற்று இருந்தார். ஆனாலும் ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர் எல்லா போட்டிகளிலும் வெளியில் உட்கார வைக்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட் பேசும் பொழுது ” இந்தியாவுக்கு தேவையான முக்கிய மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடியதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அவர் கிடைத்த வாய்ப்புகளில் சில நேரங்களில் சிறப்பாக விளையாடினார். சில கடினமான காலகட்டங்கள் அவருக்கு இருந்தது. தற்போது தாண்டி வந்து வெற்றி பெற்றுள்ளார். அவரைப் போன்று மிகவும் கடினமாக உழைத்த ஒருவர் இப்படி வெற்றி பெறுவதை பார்க்க அருமையாக உள்ளது”

- Advertisement -

இது மிகவும் கடினமானது

“இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் பேவரைட் அணியாக எல்லோராலும் கணிக்கப்பட்டது. ஒரு அணி கோப்பையை வெல்லும் என ஆரம்பத்தில் இருந்து சொல்லப்பட்டு வந்து இறுதியில் கோப்பையை வெல்வது என்பது கடினம். அது மிகப்பெரிய சுமை. ஆனால் இந்த இந்திய அணி ஆரம்பம் முதல் இறுதி வரை அதை தக்க வைத்து வந்து வெற்றி பெற்றது. கேப்டன் மற்றும் பயிற்சியாளர் சிறப்பான முறையில் அணியை கொண்டு வந்திருக்கிறார்கள்”

இதையும் படிங்க: என்னை RR டீம் தொடர்ந்து கண்காணிச்சுட்டு வந்தாங்க.. இப்ப என்னோட ஒரே குறிக்கோள் அந்த பெரிய விஷயம்தான் – வைபவ் சூரியவன்சி பேச்சு

“தற்போது இந்திய கிரிக்கெட்டில் எல்லா விஷயங்களும் சரியாக நடைபெற்று வருவதாக நான் நினைக்கிறேன். முன்பு எப்பொழுதும் விட தற்பொழுது மைதானத்தில் இந்திய அணியின் திறமை மிக அதிகமாக வெளிப்படுகிறது. முன்பும் தேவையான எல்லாம் களத்துக்கு வெளியில் இருந்தது. ஆனால் இப்பொழுதுதான் அந்த திறமைகள் எல்லாம் சரியாக வெளிப்பட்டு வருகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -