நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணியின் கேப்டன் ரகானே சரியான முறையில் முடிவுகளை எடுக்கவில்லை என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா விமர்சனம் செய்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் மிகச் சிறப்பாக ஆரம்பித்த கொல்கத்தா அணி கடைசியில் ரன்கள் சேர்க்க முடியாமல் 174 ரன்கள் எடுத்து சுருண்டது. தொடர்ந்து விளையாடிய பெங்களூர் அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது நிரந்தரம் கிடையாது
நேற்று கேகேஆர் அணி 9.5 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் மட்டுமே கலந்து இருந்தது. ஆனால் அடுத்த பத்து ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை கொடுத்து வெறும் 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது அந்த அணி எதிர்பார்க்காத பெரிய விக்கெட் சரிவாக அமைந்தது. இது தொடர்ந்து நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே கேகேஆர் அணி பலவீனமாக இருக்கிறது என்று கூற முடியாது.
அதே சமயத்தில் கேகேஆர் ஆடுகளத்தில் இருக்கும் பவுன்சை எடுக்க ஹர்ஷித் ரானா முன்கூட்டியே வந்து வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். கடந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் இதை செய்தார். மேலும் வரும் சக்கரவர்த்திக்கு முன்பாகவே பவர் பிளேவில் சுனில் நரைனை தேவைக்கு கொண்டு வருவது கேகேஆர் அணியின் நடைமுறையானதாக இருந்து வந்தது. இந்த இரண்டையும் நேற்று புதிய கேப்டன் ரகானே தவற விட்டிருக்கிறார்.
ரகானே கேப்டனாக கற்றுக் கொள்ள வேண்டும்
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசும்பொழுது “ரகானே நேற்று பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா மற்றும் சுனில் நரைன் இருவரையும் முன்கூட்டியே தாக்குதலுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். சுனில் நரைன் விராட் கோலியை நான்கு முறை ஐபிஎல் தொடரில் வீழ்த்தி இருக்கிறார். இருந்த போதும் அவருக்கு ஆரம்பத்திலேயே பந்து வீசும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ரகானே கேப்டன்ஷிப் பற்றி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : படிதாரை கூப்பிட்டு விராட் கோலி அதை சொன்னார்.. உடனே அந்த மேஜிக் நடந்தது – சேவாக் பேச்சு
இதுகுறித்து முன்னாள் கேகேஆர் மற்றும் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா பேசும் பொழுது “ரகானே சிவப்பு பந்து கிரிக்கெட்டில் நல்ல கேப்டன். ஆனால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் முனைப்புடன் இருப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். அவர் ஒரு கேப்டனாக இன்னும் முன்னேற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






