6 பந்தில் 20 ரன்.. உங்க கூட பேட்டிங்ல யார் இருக்கணும்?.. சுரேஷ் ரெய்னா மாஸ் தேர்வு

0
446
Raina

இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு எந்தவித விருப்பத்தையும் கேட்காமல் உடனடியாக சுரேஷ் ரெய்னா ஒரு வீரரின் பெயரை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தினார்.

இந்திய கிரிக்கெட்டில் சுரேஷ் ரெய்னாவுக்கு எப்பொழுதும் தனித்த இடம் இருக்கிறது. அவர் கிரிக்கெட்டின் மூன்று துறைகளிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர். இதன் காரணமாக ஒரு போட்டியில் அவருடைய தாக்கம் இல்லாமல் இருப்பது மிகவும் அரிதானது. அதே சமயத்தில் அவர் அணிக்காக சுயநலம் இல்லாமல் விளையாட கூடியவர்.

- Advertisement -

தோனியின் தளபதி

சுரேஷ் ரெய்னா மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் அறிமுகமான அற்புதமான வீரர். இவர் பேட்டிங் வரிசையில் கீழே மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து எத்தனையோ போட்டிகளை மறக்க முடியாத போட்டிகளாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார்.

மேலும் தோனியின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை எந்தவித கேள்வியும் இல்லாமல் செய்யக்கூடியவர். ஐபிஎல் தொடரில் வேறு அணிகளில் கேப்டன் பதவிக்கான வாய்ப்பு வந்தாலும் கூட சிஎஸ்கே அணியில் தான் நீங்கள் விளையாட வேண்டும் என தோனி கேட்டுக் கொண்டதற்காக கடைசி வரை அதை காப்பாற்றியவர். இப்படி தோனியின் தளபதியாகவே சுரேஷ் ரெய்னா இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலும் இருந்தார்.

- Advertisement -

6 பந்தில் 20 ரன்கள்

சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் 6 பந்தில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்கின்ற சூழ்நிலை இருந்தால், உங்களுடன் பேட்டிங் பார்ட்னராக யார் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் எனக் கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது சில பேட்ஸ்மேன்களின் பெயரும் அவருக்கு சாய்ஸ் எடுக்க சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: மீண்டும் பிசிசிஐ உடன் பிரச்சனையை ஆரம்பித்த இஷான் கிஷான்.. சாம்சனுக்கு வாய்ப்பு? – புதிய தகவல்கள்

இந்த நேரத்தில் சுரேஷ் ரெய்னா தனக்கு எந்தவித சாய்ஸும் தேவையில்லை எனவும், அப்படியான சூழ்நிலையில் என்னுடன் பேட்டிங் செய்யக்கூடிய பேட்ஸ்மேனாக மகேந்திர சிங் தோனிதான் இருக்க வேண்டும் என ஒரே நொடியில் பதில் கொடுத்தார். இது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. ஓய்வு பெற்ற பிறகும் கூட அவர் தன்னுடைய கேப்டன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அற்புதமான விசுவாசமாக இருக்கிறது!

- Advertisement -