இந்தியாவுக்கு இவர்தான் டி20 உ.கோ-யை வாங்கி தருவார்.. ஆனா ரோகித் இதுக்கு சம்மதிக்கணும் – சுரேஷ் ரெய்னா பேச்சு

0
174
Raina

ஐசிசி டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நாளை விளையாடுகிறது. தற்போது நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் எக்ஸ்பேக்டராக யார் இருப்பார்? என சுரேஷ் ரெய்னா கூறியிருக்கிறார்.

தற்போது டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பேட்டிங் யூனிட்டில் இரண்டு விஷயங்கள் மட்டுமே பெரிய தலைவலியாக இருக்கும்.

- Advertisement -

ரோகித் சர்மா உடன் துவக்க ஆட்டக்காரராக யார் களமிறங்குவார்கள்? என்பதும், விக்கெட் கீப்பராக யார் விளையாடுவார்கள்? என்பதும் இந்திய அணியின் சிந்தனைக் குழுவுக்கு தற்பொழுது பெரிய பிரச்சினையை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.

அதேபோல அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் மெதுவாக இருப்பதால் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதோடு வேகப் பந்துவீச்சில் மெதுவாகவும் கட்டர்கள் வீசுவதற்கும் சாதகமாக இருக்கும். எனவே இப்படியான சூழ்நிலையில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதா? இல்லை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதா? என்கின்ற சூழல் இருக்கிறது.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை.. ஆஸிக்கு ஆரம்பிக்கும் முன்பே உண்டான பிரச்சனை.. பயிற்சியாளர் தகவல்

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “சிவம் துபே நிச்சயம் விளையாட வேண்டும். அசையாமல் ஒரே இடத்தில் இருந்து அவ்வளவு பெரிய சிக்ஸர்களை அவர் போல் அடிப்பது எளிதானது கிடையாது. இந்தியா இந்த டி20 உலகக் கோப்பையை வெல்ல சிவம் துபே எக்ஸ் ஃபேக்டராக இருப்பார். ரோகித் சர்மா இதற்கு விராட் கோலியை மேலே விளையாட வைக்க வேண்டும். அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் வித்தியாசமான திறமைகளுடன் அவரும் அபாரமாக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.