2013 ரோஹித் செஞ்சத மறக்க முடியாது.. தோனி கிட்ட தொடர்ந்து பேசினார்.. அது மாஸ்டர் ஸ்ட்ரோக் – சுரேஷ் ரெய்னா பேச்சு

0
908
Raina

இந்திய அணிகள் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தோனி தலைமையில் விளையாடிய விதம் குறித்து பேசி இருக்கிறார்.

இந்திய வெள்ளைப் பந்து அணிகளுக்கு புதிய துவக்க ஆட்டக்காரர்களை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் 2013ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தார். அப்பொழுது நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தினேஷ் கார்த்திக் மிகச் சிறப்பாக பயிற்சி போட்டிகளில் விளையாடுகின்ற பொழுதும் ரோஹித் சர்மாவை தொடக்க ஆட்டக்காரராக அனுப்பி வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய முடிவு

இந்திய வெள்ளைப்பந்து அணியின் மிகச் சிறந்த வெற்றிகரமான துவக்க ஜோடியாக சச்சின்-கங்குலி மற்றும் சச்சின்-சேவாக் ஜோடிகள் இருந்திருக்கின்றன. இவர்கள் ஓய்வு பெற்றதற்கு பிறகு புதிய வெற்றிகரமான ஜோடியை கண்டறிய வேண்டியது தேவை இருந்தது. இந்த நேரத்தில் மகேந்திர சிங் தோனி ஷிகர் தவான் உடன் ரோஹித் சர்மாவை துவக்க ஆட்டக்காரராக அனுப்பி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசும்பொழுது ” அந்த 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். துவக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா ஒரு பக்கம் டெக்னிக்கலாக அசத்தினார். அதிரடியை ஆரம்பிப்பதற்கு முன்பாக தரையோடு விளையாடினார். இன்னொரு பக்கத்தில் ஷிகர் தவான் கிரீஸில் இருந்து வெளியேறி அடித்து அசத்தினார். அடுத்து ரோகித் சர்மா தனக்கு எப்பொழுதெல்லாம் தேவையோ அப்பொழுதெல்லாம் சிக்ஸர் அடித்தார்”

- Advertisement -

மாற்றத்தை ஏற்படுத்திய புரிதல்

“இருவரும் சேர்ந்து அந்த தொடரில் ஒரு போட்டியில் 100 ரன் பாட்னர்ஷிப் அழகாக கொண்டு வந்தார்கள். அது அங்கிருந்து வளர்ந்து அப்படியே 150 ரன் ஆக மாறியது. ஒருவருக்கு ஒருவர் ரன் அழைப்புகளை நம்பினார்கள். அவர்களுக்கு இடையேயான புரிதல் மிகவும் அபாரமாக இருந்தது. இது ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது”

இதையும் படிங்க : தமிழ்நாடு சாம்பியன் ஆகாது.. இந்த தகுதியே இல்ல.. உங்க மாநில கோச் என்ன பண்ணார்? – கவாஸ்கர் சர்ச்சை பேச்சு

” ரோஹித் சர்மா தன்னுடைய பேட்டிங்கில் நம்ப முடியாத அளவுக்கு கடினமாக உழைத்தார். அப்போதைய பயிற்சியாளர் டங்கன் ப்ளக்சர் உடன் நீண்ட நேரம் விஷயங்களை கலந்து ஆலோசிப்பார். இது மட்டும் இல்லாமல் கேப்டன் தோணியுடனும் நீண்ட நேரம் அவர் பேசுவார். அவருடன் ஒரு சிறந்த உறவை பகிர்ந்து கொண்டார். 2011ஆம் ஆண்டு உலக கோப்பை அவர் தவறவிட்ட போதும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை பிடித்துக் கொண்டார். அங்கிருந்து அவருடைய வளர்ச்சி மிகவும் அபாரமானது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -