பண்ட்க்கு 3 சான்ஸ் இருக்கு.. இதை சொல்லிட்டுதான் அவர் பேட் பண்ண வரணும் – சுரேஷ் ரெய்னா பேட்டி

0
274

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ரிஷப் பண்ட் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அறிவிக்கப்பட்ட இந்திய அணி

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஒரு நாள் மற்றும் டி20 இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க போராடி வருகிறார். டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அவரால் இந்த இரண்டு வடிவ கிரிக்கெட்டில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. எனவே வரவுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இவருக்கு முக்கிய தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் பண்ட் ஒரு நாள் கிரிக்கெட்டில் நிதானத்தை கடைபிடித்து அதன் பின்னர் அதிரடியாக விளையாடும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர். சாம்பியன்ஸ் டிராபி நீண்ட கிரிக்கெட் தொடர் என்பதால் ஆடுகளத்தில் முதலில் நேரத்தை செலவிட்டு பொறுப்பை உணர்ந்து அதற்கு பின்னர் தனது இயல்பான ஆட்டத்தை ஆடும்படி சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரிஷப் பண்ட் தனது விக்கெட் கீப்பிங்கில் அதிகம் முன்னேற்றம் அடைந்துள்ளார். ஆனால் பேட்டிங்கில் தனது பொறுப்பை உணர்ந்து அவர் விளையாட வேண்டும். ஏனென்றால் இது 50 ஓவர் போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிராக உங்களுக்கு மூன்று ஒருநாள் போட்டியில் இருக்கின்றன. எனவே இது அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். ரிஷப் பண்ட் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்து அனைத்தும் உள்ளது.

பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்

ஜெய்ஸ்வால் டாப் வரிசையில் விளையாடவில்லை என்றால் ரிஷப் பண்ட் அவரது பாத்திரத்தில் முக்கிய பங்கு வகிப்பார் என்று நினைக்கிறேன். ஹர்திக் பாண்டியாவுக்கு முன்னதாக நான்காவது வரிசையில் அவர் களம் இறங்கலாம். ஏனென்றால் பண்ட் 40 முதல் 50 பந்துகள் வரை விளையாடினால் ஆட்டத்தை முடித்து விடலாம். நான் 50 பந்துகள் விளையாடினால் என்பது முதல் 100 ரன்கள் வரை எடுக்க முடியும் என்று அவர் தனக்குள் சொல்லிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:விராட் ரோஹித் யார்னு தெரிய.. இந்த 2 மேட்ச் போதும்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. சம்பவம் பண்ணுவாங்க – ஹர்பஜன் சிங்

அவர் முதலில் மைதானத்தில் நேரத்தை செலவிடுவது முக்கியம். மாறாக அவர் தவறு செய்தால் அது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும். அவர் நல்ல திறமை படைத்த வீரர். ஆட்டத்தை முடிக்கும் தன்மை அவரிடத்தில் இருக்கிறது. இந்திய அணிக்கு அவர் முக்கிய காரணியாக இருக்கப் போகிறார்” என்று சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.

- Advertisement -