சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் இதற்காக இந்திய அணி மிகத் தீவிரமான முறையில் தயாராகி வருகிறது. கடந்த முறை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சீனியர் வீரர்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா
இந்திய அணியில் மூத்த சீனியர் வீரர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் சமீபத்தில் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் மிக மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிலும் விராட் கோலி தொடர்ந்து ஒரே மாதிரியான முறையில் ஆட்டம் இழந்தும் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கில் ரொம்பவே தடுமாறியும் விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐயின் அறிவுறுத்தலின் பேரில் ரோகித் சர்மா மும்பை அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
மேலும் டெல்லி அணிக்காக விளையாட வேண்டிய விராத் கோலி கழுத்து பிரச்சனையின் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் இருவரின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் இவர்கள் இருவரையும் ஆதரித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். சீனியர் வீரர்களின் பேட்டிங் ஃபார்ம் எப்படி இருந்தாலும் முக்கியமான தொடரில் எப்படி திரும்ப வேண்டும் என்று இவர்கள் இருவருக்கும் நன்றாக தெரியும் என சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
எப்படி திரும்பி வருவது என நன்றாக தெரியும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எப்படி மோசமாக விளையாடினாலும் ஒரு முக்கிய தொடரில் எப்படி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவது என்று அறிந்தவரே சிறந்த வீரர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சிறந்த வீரர்கள். அவர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள். பெரிய தொடர்களில் அவர்கள் இருவரும் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய இரண்டும் சிறந்த எடுத்துக்காட்டு.
இதையும் படிங்க:2 ரன்.. கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த நைஜீரியா.. நியூசிலாந்து அணி எதிர்பாராத தோல்வி.. U19 மகளிர் டி20 உலக கோப்பை
விராட்,ரோஹித், பும்ரா மற்றும் சமி ஆகிய வீரர்கள் மேட்ச் வின்னர்கள் ஒவ்வொருவரும் கடினமான காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். பெரிய வீரர்களுக்கு எப்படி திரும்பி வருவது என்று தெரியும். இதில் விராட் மற்றும் ரோகித் இருவரும் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி யை பட்டத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.