அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை கழட்டி விடும் என ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.
இப்போதைக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தாமாகவே ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவித்து விலகிவிட்டார். இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கு தற்போது 10 கோடி ரூபாய் கையில் இருக்கிறது. மேற்கொண்டு அவர்கள் எந்தெந்த வீரர்களை வெளியில் விடுவார்கள் என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா சொல்லியிருக்கிறார்.
அஸ்வினுக்கு அடுத்து இவர்தான்
இந்த நிலையில் சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜாவை கொடுத்துவிட்டு சஞ்சு சாம்சனை வாங்கி விட்டது என்கின்ற தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இது வீரர்கள் பரிமாற்றம் என்பதால் சிஎஸ்கே அணிக்கு கையில் இருந்து எந்த செலவும் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” தற்போது சிஎஸ்கே அணிக்கு தக்கவைப்பு பட்டியல் பெரிதாக இருக்கும். கழட்டிவிடும் வீரர்கள் குறைவுதான். அது குறித்து நாம் பார்க்கலாம். அஸ்வின் முன்கூட்டியே வெளியேறி விட்டார் எனவே ஒரு பத்து கோடி ரூபாய் அவர்களுக்கு கிடைக்கும். இவரைத் தொடர்ந்து அடுத்து ஒரு பெரிய விலையில் உள்ள வீரர் வெளியேற்றப்படுவார் என்றால் அது கான்வே”
மேலும் மூன்று வீரர்கள்
“கான்வே சிஎஸ்கே அணி உடன் நீண்ட காலம் தங்கியிருக்கிறார். அவருக்கு கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் காயம் காரணமாக சில பிரச்சனைகள் இருந்தது. எனவே கிடைத்த வாய்ப்புகளும் குறைவாகவே இருந்தது. இவரை விடுவித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். இவருடைய விலை 6.25 கோடி ரூபாய். இதன் மூலம் 16 கோடி ரூபாய் இப்போதைக்கு அவர்களது கையில் இருக்கும்”
இதையும் படிங்க : அபிஷேக் சர்மா கிட்ட அதை மட்டும் யாராலும் செய்ய முடியாது.. பொய் சொல்லுவான் சண்டை போடுவான் – பேச்சு
மேலும் இவர்கள் 3 கோடி ரூபாய்க்கு மேல் விலை உள்ள ராகுல் திரிபாதி, ஒன்னரை கோடிக்கு பக்கத்தில் விலை உள்ள விஜய் சங்கர் மற்றும் தீபக் ஹடா ஆகியோரையும் வெளியேற்றுவார்கள். இதன்மூலம் இவர்களுக்கு மொத்தமாக 23 கோடி ரூபாய் கையில் இருக்கும். இந்த முறை ஏலத்தில் சிஎஸ்கே அணி சிறப்பாக அமரும்” என்று கூறி இருக்கிறார்.






