கடந்த இரண்டு மாத காலமாக இந்தியாவில் நடைபெற்று வருகின்ற 17ஆவது ஐபிஎல் சீசன் தொடர் இன்றுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இறுதிப்போட்டியில் ஹைதராபாத் கொல்கத்தா அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு முன்னாள் சிஎஸ்கே லெஜெண்ட் சுரேஷ் ரெய்னா ஒரு முக்கிய அறிவுரை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைமையில் ஹைதராபாத் அணி மிகச் சிறந்த முறையில் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுகிறது. அந்த அணி முழுக்க முழுக்க தங்களது பேட்டிங் வரிசையை நம்பி விளையாடுகிறது. அவர்கள் எடுத்துக் கொடுக்கும் கூடுதல் ரன்கள் மூலமாக தங்களது பந்து வீச்சு பலவீனத்தைச் சமாளிக்கிறது.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் மற்றும் முதலாவது தகுதிச் சுற்றில் ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது. இந்த இரண்டு போட்டியிலும் ஒரு முறை இரண்டாவது பேட்டிங் செய்தும் ஒரு முறை முதலில் பேட்டிங் செய்தும் தோல்வி அடைந்திருக்கிறது.
ஹைதராபாத் அணி தற்போது பேட்டிங்கை முழுவதுமாக நம்பி விளையாடுகின்ற காரணத்தினால், அந்த அணி எப்படியான அணுகுமுறையை இறுதிப் போட்டியில் கொண்டிருக்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா ஆலோசனையாகக் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது “சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யும் அவர்களது அணுகுமுறையைக் கைவிடக்கூடாது. வழக்கம்போல் முதலில் விளையாடி ஸ்கோர் போர்டில் பெரிய ரன்களை வைக்க வேண்டும். எட்டு ஓவர்கள் கொல்கத்தா அணியின் சுழல் பந்துவீச்சை விளையாட வேண்டியது மிக முக்கியமான பாகமாக இருக்கும்.
இதையும் படிங்க : எதிர் டீம்க்கு என்ன செய்யனும்னு கம்பீருக்கு தெரியும்.. கம்மின்ஸ்க்கு ஸ்ரேயாஸ் ஐயர் பதிலடி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கின்ற காரணத்தினால் அழுத்தம் வித்தியாசமானதாக இருக்கும். ஹைதராபாத் அணியின் முக்கிய புள்ளி அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ். அவர் உலகக் கோப்பையை வென்றிருக்கிறார். எனவே அவருக்கு அழுத்தத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியும். மேலும் வீரர்கள் தங்களின் ரோலை அறிந்திருக்கிறார்கள் எனவே எல்லாமே ஒழுங்காக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.