டி20 உலக கோப்பையில இந்த 2 டீம் 300 ரன் அடிக்கும்.. இவங்க சதம் அடிச்சா போதும் – ரவி சாஸ்திரி கணிப்பு

0
4
Ravi

2026 டி20 உலகக் கோப்பையில் எந்த அணி ஒரு போட்டியில் 300 ரன்கள் எடுக்கும் என்பது குறித்து ரவி சாஸ்திரி தனது கணிப்பை கூறியிருக்கிறார்.

தற்போது டி20 கிரிக்கெட் மிகவும் அதிரடியாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் எந்த அணி 300 ரன்கள் தாண்டி எடுக்கும் என்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இதுதான் மிக முக்கியம்

டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி 300 ரன்கள் தாண்டி எடுக்க வேண்டும் என்றால் அதற்கு துவக்க ஆட்டக்காரர்கள் இருவருமே பெரிய அதிரடி ஆட்டக்காரர்களாக இருக்க வேண்டும். அடுத்து மூன்றாவது இடத்தில் வரக்கூடிய வரும் அவர்களைப் போலவே விளையாடக் கூடியவராக இருக்க வேண்டும்.

இப்படி இருந்தால் மட்டுமே பந்துகள் வீணாகாமல் மேல் வரிசையில் இருந்து பெரிய ஸ்கோர் வரும். அப்படி வரும் பொழுது தான் ஒரு போட்டியில் 300 ரன்கள் தாண்டி ஒரு அணியால் எடுக்க முடியும். மிடில் ஆர்டர் அதிரடியாக விளையாடி 300 ரன்கள் தாண்டுவது என்பது முடியாத காரியம். எனவே இது முழுக்க முழுக்க டாப் ஆர்டர் சம்பந்தப்பட்டது.

- Advertisement -

இந்த அணிகளால் முடியும்

இந்த வகையில் எந்த அணிக்கு மிகச்சிறந்த அதிரடி துவக்க ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து இந்திய முன்னாள் தலைமை பயிற்சிளர் ரவி சாஸ்திரி தன்னுடைய கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க : முட்டாள்தனம் முட்டாள்தனம்.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு செய்வது நியாயம் இல்லை – இர்பான் பதான் விமர்சனம்

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது ” இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 300 ரன்கள் தாண்டி எடுக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த அணிகளில் உள்ள வீரர்களின் வகைகளை வைத்து பார்க்கும் பொழுது நான் இந்த முடிவுக்கு வருகிறேன். பல அதிரடியான வீரர்களை இந்த அணிகள் வைத்திருக்கின்றன. மிகக்குறிப்பாக துவக்க இடத்தில் மிகச்சிறந்த அதிரடி வீரர்கள் இவர்களிடம் இருக்கிறார்கள். இந்த அணிகளில் உள்ள தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் சதம் அடித்தால் அந்த அணி 300 ரன்கள் பக்கத்தில் இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -