இந்த 3 பேர் தான், என்னை போல் பயமின்றி விளையாடுறாங்க.. நல்ல எதிர்காலம் இருக்கு.. ரெய்னா கருத்து

0
793

இந்திய அணியில் தனது துணிச்சலான ஆட்டத்தை பிரதிபலிக்கும் பேட்ஸ்மேனாக யார் உள்ளார் என்பது குறித்து சுரேஷ் ரெய்னா தேர்ந்தெடுத்தார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ரெய்னா, சர்வதேச அளவில் மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆவார்.

ஐபிஎல் தொடரில் ஒரு காலத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே அணி பலமுறை பட்டம் வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார். இது குறித்து பேசிய ரெய்னா, “அபிஷேக் ஷர்மா. அவர் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும், துணிச்சலானவர். யுவராஜ் சிங் அவருக்கு நிறைய பயிற்சி அளித்துள்ளார்,” என்று கூறினார்.

- Advertisement -

அபிஷேக் சர்மாவுக்கு பாராட்டு:

அபிஷேக் ஷர்மா ஐபிஎல் 2024-ல் அபாரமாக விளையாடி, உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எவெளுத்து வாங்கினார். இதையடுத்து, அவர் இந்திய டி20 அணியில் இடம் பிடித்து, தனது இரண்டாவது போட்டியிலேயே முதல் சர்வதேச சதத்தை அடித்தார். அபிஷேக் தவிர, ரெய்னா மற்ற இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களான பிரியன்ஷ் ஆர்யா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலையும் தேர்ந்து எடுத்தார்.

இருவரும், நாட்டுக்கு நன்கு பங்களிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் என்றும் ரெய்னா கூறினார். இதில் ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டிகளில் தனக்கு என ஒரு முத்திரையை குத்திய நிலையில், ஒருநாள், டி20 போட்டியில் பெரிய அளவு வாய்ப்பை பெறவில்லை. யஷஸ்வி பற்றி பேசும்போது, போராடும் மனப்பான்மை உள்ளதாக ரெய்னா பாராட்டினார்.“பிரியன்ஷ் ஆர்யாவும் மிகவும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வீரராக இருக்க முடியும். இருப்பினும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வேறு விதமான பணி நெறிமுறை உள்ளது.”

- Advertisement -

ஜெய்ஸ்வால், பிரியன்ஸ் ஆர்யா:

“அவருக்கு போராடும் மனப்பான்மை உள்ளது. அவர் ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் சதம் அடித்துள்ளார். அவரது ஆட்ட விழிப்புணர்வு மிகவும் சிறப்பானது,” என்று ரெய்னா கருத்து தெரிவித்தார்.பிரியன்ஷ் ஆர்யா இன்னும் இந்திய அணிக்கு இன்னும் தேர்வாகவில்லை. இருப்பினும், ஐபிஎல் 2025-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 17 இன்னிங்ஸ்களில் 475 ரன்கள், 179.25 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து அசத்தினார்.

இதையும் படிங்க: துலீப் கோப்பை 2025.. LSG வீரர் பதோனி இரட்டை சதம்.. முன்னாள் அண்டர்-19 கேப்டனும் அபார ஆட்டம்.. இறுதி நாளில் நடந்தது என்ன?

இதற்கிடையில், யஷஸ்வி ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. அங்கு அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் அல்லது ஷுப்மன் கில்லுடன் தொடக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ரெய்னா ரிங்கு சிங் பெயரை விட்டுவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ரெய்னாவை போல், அவரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -