துலீப் கோப்பை 2025.. LSG வீரர் பதோனி இரட்டை சதம்.. முன்னாள் அண்டர்-19 கேப்டனும் அபார ஆட்டம்.. இறுதி நாளில் நடந்தது என்ன?

0
68

துலீப் கோப்பை தொடர் முதல் சுற்று ஆட்டத்தில் நார்த் சோன் அணியும் ஈஸ்ட் ஸோன் அணியும் மோதிய போட்டி வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிவடைந்தது.முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் பெற்றதன் காரணமாக நார்த் சோன் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நார்த் சோன் அணி முதல் இன்னிங்சில் 405 ரன்கள் எடுக்க, ஈஸ்ட் ஸோன் அணி முதல் இன்னிங்ஸில் 230 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து 175 ரன்கள் முன்னிலை பெற்ற நார்த் சோன் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.

- Advertisement -

இரட்டை சதம் அடித்த பதோனி:

இதில் தொடக்க வீரர் அங்கீத் குமார் 321 பந்துகளை எதிர்கொண்டு 198 ரன்கள் விளாசி இரண்டு ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார். இதேபோன்று மூன்றாவது வீரராக களம் இறங்கிய முன்னாள் அண்டர் 19 கேப்டன் யாஷ் தூல் 133 ரன்கள் குவித்து அசத்தினார். இதய அறுவை சிகிச்சைக்கு பின் கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ள யாஷ் தூல், தற்போது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதில்14 பௌண்டரிகளும்,மூன்று சிக்சர்களும் அடித்திருந்தார். இதேபோன்று லக்னோ அணியின் நட்சத்திர வீரர் ஆயுஸ் பதோணி 223 பந்துகளில் 204 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 13 பவுண்டரிகளும் மூன்று சிக்சர்களும் அடங்கும். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் நார்த் சோன் அணி முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் பெற்றதால், நார்த் சோன் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

- Advertisement -

இதில் ஈஸ்ட் சவுண்ட் அணி சார்பாக களமிறங்கிய முகமது சமி இரண்டாவது இன்னிங்ஸில் கட்டுக்கோப்பாக பந்து வீசி 11 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இதேபோன்று நார்த் ஈஸ்ட் சோன் மற்றும் சென்ட்ரல் சோன் அணிக்கு இடையிலான ஆட்டமும் சமனில் முடிவடைந்தது. மேலும் முதல் இன்னிங்சிக் அதிக ரன்கள் பெற்ற சென்ட்ரல் சோன் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

சமனில் முடிவடைந்த ஆட்டம்:

அணி முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 532 ரன்கள் எடுக்க நார்த் ஈஸ்ட் சோன் 185 ரன்கள் அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் சென்ட்ரல் சோன் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 679 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நார்த் ஈஸ்ட் ஸோன் அணி விளையாடுயது.

இதையும் படிங்க: 6, 6, 6.. நான்தான் பினிஷர்.. ஷிவம் துபேவுக்கு இடம் கிடையாது.. ரிங்கு சிங் சிங் செய்த காரியம்

நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. இதில் சென்ட்ரல் சோன் அணி சார்பாக பந்து வீசிய தீபக்சாகர் ஆறு ஓவரில் 21 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். விக்கெட் ஏதும் அவர் எடுக்கவில்லை.இதைப் போன்று சிஎஸ்கே வீரர் கலீல் அகமத் எட்டு ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவரும் விக்கெட் வீழ்த்தவில்லை. இதே போன்று குல்திப் யாதவ் 12 ஓவர்கள் வீசி 42 ரன்கள் விட்டுக் கொடுத்தார் அவரும் விக்கெட் எடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -