பும்ரா விராட் இல்ல.. சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் கேம் சேஞ்சர் இவர்தான் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

0
284
Raina

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்க இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் கேம் சேஞ்சராக விராட் கோலி மற்றும் பும்ரா தாண்டி வேறொரு வீரர் இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கணித்திருக்கிறார்..

இந்த முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தினாலும் கூட, அரசியல் காரணங்களால் இந்தியா பாகிஸ்தான் செல்லாததால் இந்திய அணியின் போட்டிகள் துபாய் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இந்திய அணி பிப்ரவரி 20ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் போட்டியை விளையாடுகிறது.

- Advertisement -

கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி

நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு மட்டும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் மிகவும் முக்கியமான தொடராக அமைந்திருக்கிறது.

இந்தியாவில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தது, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது என கேப்டன் பொறுப்பில் ரோஹித் சர்மாவுக்கு நிறைய பின்னடைவுகள் இருக்கிறது. இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியை வென்று வருவது, அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிப்பதற்கு உதவி செய்யும். எனவே அவருக்கு இந்த தொடர் தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியமானதாக அமைகிறது.

- Advertisement -

இவர்தான் இந்திய அணியின் கேம் சேன்ஞ்சர்

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பேசும் பொழுது ” இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவருடைய ஜோனில் இருக்கும் பொழுது அவரை விட சிறந்த பேட்ஸ்மேன்கள் யாரும் உலகில் இருக்க முடியாது. அவருக்கு யாரையும் விட பேட்டிங்கில் மிக அருமையான டைமிங் இருக்கிறது. மேலும் குறிப்பாக 20 முதல் 25 ஓவர்கள் அவர் நீடித்து விளையாடிவிட்டால், போட்டியை ஒரு தலைப்பட்சமாக இந்தியாவின் பக்கம் கொண்டு வரும் திறமை படைத்தவர். எனவே அவர் சாம்பியன் டிராபியில் இந்திய அணியின் கேம் சேன்ஜராக இருப்பார்”

இதையும் படிங்க : இந்திய அணியை ஜெயிக்க ஐடியா தரேன்.. இங்கிலாந்து நீங்க இத செஞ்சா மட்டும்தான் முடியும் – அஸ்வின் அறிவுரை

“மேலும் ஒரு ஒருநாள் போட்டியில் கூட ஜெய்ஸ்வால் விளையாடாத பொழுதும், அவரை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நம்பி சாம்பியன்ஸ் டிராபி மாதிரியான ஐசிசி தொடருக்கு தேர்வு செய்திருக்கிறார். அந்தப் பையன் ரன்கள் எடுக்க பசியோடு இருக்கிறார் என்றும், மேலும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்றும் கேப்டன் ரோஹித் சர்மா புரிந்து கொண்டிருக்கிறார். எனவே அவருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்” என்று பாராட்டி கூறியிருக்கிறார்.

- Advertisement -