இந்திய கிரிக்கெட்

விராட் கோலி எனக்கு செய்தது தவறு.. அதனால் ஒரு உலகக் கோப்பையே போச்சு – சுரேஷ் ரெய்னா வேதனை

​இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து தான் ஓரங்கட்டப்பட்டது மற்றும் தனது ஓய்வு முடிவு குறித்து முன்னாள் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா வெளிப்படையாக பேசியுள்ளார்.

- Advertisement -

​எம்எஸ் தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா, விராட் கோலி கேப்டனான பிறகு தனக்கான வாய்ப்புகள் குறைந்ததாக தெரிவித்துள்ளார். யோ யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்று உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டும் தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

​2019 வேர்ல்ட் கப் தொடரில் அனுபவமிக்க வீரர்கள் தேவைப்பட்ட நேரத்தில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து அப்போதைய கேப்டன் மற்றும் கோச்சியிடம் கேள்விகள் கேட்டதாகவும், ஆனால் அதற்கு சரியான பதில்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

​இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசும்போது “ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒரு தனிப்பட்ட டீம் இருக்கும், விராட் கோலி கேப்டனான பிறகு அவருக்கு வேறு சில பிளேயர்கள் சிறப்பாக தெரிந்தது இயல்புதான், நான் யோ யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்று டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ரன்கள் அடித்தும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் தொடர்ந்து பேசும்போது “நான் கேப்டன் மற்றும் கோச்சிடம் இதுகுறித்து கேள்விகள் கேட்டேன் ஆனால் எனக்கு சரியான பதில்கள் வரவில்லை, 2019 வேர்ல்ட் கப் தொடரில் எனக்கோ அல்லது யுவராஜ் சிங்கிற்கோ வாய்ப்பு கொடுத்திருக்கலாம் ஆனால் இப்போது அதைப்பற்றி பேசி எந்த பயனும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts