ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் பலவீனங்களை தான் தெரிந்து கொள்வதற்கு ஐபிஎல் தொடர் உதவியதாக இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.
நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவருக்கும் இடையே பேட் மற்றும் பந்தில் நல்ல போட்டி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
மாறிய 2020-21 தொடர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் அஸ்வினுக்கு எதிராக சிறப்பான புள்ளி விபரங்களை கொண்டிருந்தார். இருவரும் முதல்முறையாக 2013-14 டெஸ்ட் தொடரில் சந்தித்துக் கொண்டார்கள். அங்கிருந்து மிகச் சிறப்பான முறையில் அஸ்வினுக்கு எதிராக பேட்டிங் செய்து கொண்டு வந்தார்.
இந்த நிலை 2020-21 டெஸ்ட் தொடரின் போது மாறியது. ஆஸ்திரேலியாவில் வைத்து ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு முறை சிறுத்தை வெகு எளிதாக ஆட்டம் இழக்க செய்திருந்தார். அஸ்வின் தன் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு தான் விட்டது தப்பாகிவிட்டது என ஸ்மித் அப்பொழுது கூறி இருந்தார். ஆனாலும் அதற்குப் பிறகு அவரால் அஸ்வினுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
ஐபிஎல் தொடரில் கண்டுபிடித்தேன்
இது குறித்து அஸ்வின் கூறும் பொழுது “ஸ்மித் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக மிக சிறப்பாக விளையாடக்கூடியவர். அவர் அதற்கென தனியாக சிறந்த தயாரிப்புகளை செய்து கொண்டு வரக்கூடியவர். அதேபோல் தன் தயாரிப்புகளை மிகச் சிறந்த முறையில் களத்தில் செயல்படுத்துவார். இருந்தபோதிலும் அவருக்கு எதிராக அதை உடைப்பதற்கு நான் வழிகளை கண்டுபிடித்தேன்”
இதையும் படிங்க : என் மகன் சாம்சனின் கேரியரை.. தோனி விராட் ரோகித் அழிச்சாங்க.. தமிழக வீரர் பேசுனத தாங்க முடியல – சஞ்சு சாம்சன் தந்தை பேட்டி
“ஸ்மித் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காகவும் புனே அணிக்காகவும் விளையாடிய காலகட்டத்தில் நானும் அந்த அணிகளில் இருந்தேன். அப்பொழுது அவர் எப்படி பயிற்சிக்கு தயாராகிறார்? பயிற்சியில் என்ன விரும்புகிறார்? அவருக்கு எது சரி வரவில்லை? என்பது குறித்து நான் அறிந்து கொண்டேன். அவர் எப்படி பேட்டிங் செய்கிறார் என்பது குறித்து நான் புரிந்து கொண்டேன். இந்த இடத்தில் இருந்து தான் நான் அவர் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தேன். எனக்கு எட்ஜ் கிடைக்க ஆரம்பித்தது” என்று கூறியிருக்கிறார்.