தற்போது சிஎஸ்கே அணிக்கு விளையாடி வரும் ஆயுஸ் மத்ரேவைவை விட வைபவ் சூரியவன்சி சீக்கிரத்தில் இந்திய அணிக்கு அறிமுகமாவார் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து.
இந்திய அண்டர் 19 கிரிக்கெட்டில் மிகவும் கவனிக்கப்படும் வீரர்களாக சிஎஸ்கே ஆயுஸ் மத்ரே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் வைபவ் சூர்யவன்சி இரண்டு இளம் வீரர்களும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எதிர்கால இந்திய அணிக்கு மிக முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் மற்றும் இங்கிலாந்து தொடர்
ஐபிஎல் தொடரில் ஆயுஸ் மத்ரே சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வாய்ப்பை மிக அருமையாக பயன்படுத்திக் கொண்டார். அதிரடியாக விளையாடும் நேரத்தில் சூழ்நிலையையும் சரியாக புரிந்து கொண்டு விளையாடும் திறன் இவரிடம் அதிகமாக இருக்கிறது. மேலும் இந்திய அண்டர் 19 கிரிக்கெட் அணியின் கேப்டனாக தற்போது இங்கிலாந்து சென்றும் சிறப்பாக விளையாடினார்.
அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வைபவ் சூரியவன்சி ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற மெகா சாதனையை 14 வயதில் படைத்தார். இத்துடன் அண்டர் 19 இங்கிலாந்து தொடரில் சரமாரியாக அதிரடியாக விளையாடி போட்டியை ஒரு பக்கமாக இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்.
வைபவ் சூரியவன்சி பெரிய டேலண்ட்
இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசும்பொழுது “இந்திய அணிக்கு இருவரில் முதலில் வைபவ் சூரியவன்சிதான் அறிமுகம் ஆவார். அவரது அச்சமற்ற அணுகுமுறை மிகவும் சிறப்பானது. ஆயுஸ் மத்ரேவும் சிறப்பானவர்தான். ஆனால் சூரியவன்சி எஸ்பெக்ட்டர். அவர் அதிரடியாக விளையாடி போட்டியை மாற்றி விடுவார். இங்கிலாந்து அண்டர் 19 தொடரில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சதம் அடித்தார். மேலும் ஐபிஎல் தொடரிலும் சதம் அடித்திருக்கிறார். பீகாரைச் சேர்ந்த இவர் யாரையும் விட வெயிட்டானவராக இருக்கிறார்”
இதையும் படிங்க : கம்பீர்னால ஐயரை சமாளிக்க முடியாது.. டி20 அணியில் இடம் கொடுக்காததற்கு இதுதான் காரணம் – இங்கி முன்னாள் பவுலர் பேட்டி
“பீகாரைச் சேர்ந்த ஒரு பயிற்சியாளர் அவரைப் பார்த்துக் கொள்வதாக என்னிடம் கூறினார். இதுபோன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒரு முறைதான் வருவார்கள். ரிஷப் பண்ட், ரிங்கு சிங் மற்றும் வைபவ் சூர்யவன்சி போன்றவர்கள்” என்று கூறியிருக்கிறார்.






