தோனியை பேட்ஸ்மேனாக பிடிக்குமா அல்லது விக்கெட் கீப்பராக பிடிக்குமா ? – சுரேஷ் ரெய்னா பளிச் விளக்கம்

0
43
Suresh Raina about MS Dhoni

2008 முதல் கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தலைமை தாங்கி வந்த மகேந்திர சிங் தோனி தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் அந்த அணியை ரவீந்திர ஜடேஜா தலைமை தாங்குவதாக அதிகாரப்பூர்வமான செய்தி நேற்றைய முன்தினம் வெளியானது.

சென்னை அணிக்கு இதுவரை நான்கு கோப்பைகளையும், இரண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைகளையும் கைப்பற்றி கொடுத்த கேப்டன் மகேந்திர சிங் தோனி. அது மட்டுமின்றி ஐந்து முறை ரன்னர் அப் பட்டத்தையும் மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை அணி வென்றதும் குறிப்பிடத்தக்கது.

மகேந்திர சிங் தோனி குறித்துப் பேசியுள்ள சுரேஷ் ரெய்னா

சிஎஸ்கே என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வரும் இரு பெயர்கள் மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா மட்டுமே. அதில் சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களம் இறங்கப் போவதில்லை. கடந்த ஆண்டு சற்று சுமாராக விளையாடி அவரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சென்னை அணி கைப்பற்றவில்லை.

அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மெகா ஏலத்தில் வேறு எந்த அணியும் அவரை கைப்பற்ற காரணத்தினால் இந்த முறை அவர் ஐபிஎல் தொடரில் விளையாட போவதில்லை. மாறாக அவர் தற்போது நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஒரு உரையாடலில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்வி என்னவெனில் மகேந்திர சிங் தோனியை பேட்ஸ்மேனாக அல்லது விக்கெட் கீப்பராக, நீங்கள் இதில் எந்த மகேந்திர சிங் தோனியை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.

பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி தான் என்னுடைய தேர்வு

அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா “மகேந்திர சிங் தோனி பேட்ஸ்மேனாக நிறைய முறை சென்னை அணிக்கு பலமுறை வெற்றிகளை தேடித் தந்திருக்கிறார். எனவே இந்த இரு தேர்வில் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனியை தான் நான் தேர்ந்தெடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா கூறுவதுபோல் சென்னை அணிக்கு மகேந்திர சிங் தோனி நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் அதிக முறை விளையாடி இருக்கிறார். குறிப்பாக ஐந்தாவது இடத்தில் 70 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1928 ரன்களை அதிகபட்சமாக குவித்திருக்கிறார். இந்த குறிப்பிட்ட இடத்தில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 143.88 மற்றும் ஆவெரேஜ் 47 ஆகும்.

சென்னை அணி பல இக்கட்டான நிலையில் சிக்கி தவித்த பொழுது கடைசி வரை நின்று நிறைய முறை சென்னை அணியை கரை சேர்த்த பெருமை தோனிக்கு உண்டு. எனவே சுரேஷ் ரெய்னா கூறிய கருத்தில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.