ஐபிஎல் 2025

40 பந்தில் ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக் ஷர்மா.. சதம் அடித்து பேப்பரில் காட்டியது என்ன? – சுவாரசிய தகவல்

இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர இளம் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா 40 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்தார். பிறகு களத்தில் அவர் ஒரு பேப்பரை எடுத்து காட்டினார். தற்போது அதில் என்ன இருந்தது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பட்டையை கிளப்பிய பஞ்சாப்

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான முறையில் விளையாடிய 36 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 245 ரன்கள் குவித்தது. எனவே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகப் பெரிய அளவில் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்டது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் பேட்டிங் செய்ய வந்தார்கள். இந்த நிலையில் யாஷ் வீசிய பந்தில் அபிஷேக் ஷர்மா கேட்ச் கொடுத்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பந்து நோ-பாலாக அமைந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட அபிஷேக் ஷர்மா ருத்ர தாண்டவம் ஆடினார்.

- Advertisement -

பேப்பரில் என்ன காட்டினார்

இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 19 பந்தில் அரை சதம் அடித்தார். மேற்கொண்டு விளையாடிய அவர் 40 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் சதம் அடித்து அசத்தினார். இந்திய வீரர்களில் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதையும் படிங்க : ஒரே ஒரு ரன்.. இந்திய பவுலர்களில் ஷமிக்கு நடந்த சோகம்.. ஸ்ரேயாஷ் மாஸான ஸ்பெஷல் சாதனை

மேலும் சதம் அடித்து முடித்த பிறகு பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்துக் காட்டினார். அந்த பேப்பரில் “இந்த சதம் ஆரஞ்சு ஆர்மிக்கு” என்று எழுதி இருந்தது. இந்த போட்டிக்கு வருவதற்கு முன்பாக பேப்பரில் தான் உறுதியாக சதம் அடிப்பேன் என நம்பி எழுதி வைத்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். பின்பு சதம் அடித்து அதை காட்டி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts