ஐபிஎல் மீட்டிங்: பட்டையை கிளப்பிய காவ்யா மாறன்.. 3 முக்கிய கோரிக்கைகள்.. நடந்தது என்ன?

0
472
Kavya

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் உரிமையாளர்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் சந்திப்பை நடத்தியது. இதில் ஐபிஎல் மெகா ஏலம் குறித்து பல விஷயங்கள் தொடர்பாக அணி உரிமையாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இந்த ஐபிஎல் சந்திப்பில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சிறப்பான முறையில் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்து அசத்தியிருக்கிறார்.

பொதுவாக ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ஆரம்பத்தில் இருந்து மெகா ஏலத்திற்கு எதிராகவே இருந்திருக்கிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி இளம் வீரர்களை உருவாக்குகின்ற காரணத்தினால் மெகா ஏலம் பெரிய பிரச்சினையாக இருக்கிறது என ஏற்கனவே கூறியிருந்தது. தற்பொழுது பல அணிகள் மும்பை இந்தியன்ஸ் போலவே ஐபிஎல் சந்திப்பில் பேசியிருக்கின்றன. சில சிறிய அணிகள் மட்டுமே மெகா ஏலத்தை விரும்புகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் ஐபிஎல் கூட்டத்தில் கலந்து கொண்ட காவ்யா மாறன் “ஐபிஎல் ஏலத்தில் ஒரு வீரர் தேர்வு செய்யப்பட்ட பிறகு காயம் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் விளையாட வரவில்லை என்றால் அந்த வீரரை தடை செய்ய வேண்டும். ஒரு வீரரை குறைந்த தொகைக்கு ஏலத்தில் வாங்க நிறைய வேலைகள் செய்யப்படுகிறது. இப்படி வாங்கப்பட்டு அந்த வீரர் வராவிட்டால் அணியின் காம்பினேஷன் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் ஒரு அணியை உருவாக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும். உதாரணமாக அபிஷேக் ஷர்மா தனது செயல் திறனுடன் வெளியே வருவதற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மூன்று ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இதுபோன்ற பல அணிகளில் பல வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். எனவே மெகா ஏலத்தை விட மினி ஏலம்தான் சரியானது.

- Advertisement -

மேலும் மூத்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் நிறைய மதிப்பை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பிராண்ட் வேல்யூவை அணிக்கு கொண்டு வருகிறார்கள். இப்படி இருக்கும் பொழுது மெகா ஏலத்தால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அந்த வீரர்களை தக்க வைப்பது கடினமாகிறது. மேலும் அவர்களுடைய மதிப்புக்கு தகுந்த சம்பளத்தையும் சரியாக கொடுக்க முடிவதில்லை. அதே சமயத்தில் மினியலம் என்று இருக்கும் பொழுது அவர்கள் அதிலிருந்து அவர்களுடைய தகுதிக்கு தகுந்த சம்பளத்தை பெற முடியும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : போட்டிக்கு ஒரு நாள் முன்பாக.. இலங்கை அணியில் சேர்க்கப்பட்ட தமிழ் வீரர்.. பின்னணி காரணம் என்ன?

காவ்யா மாறன் இந்த ஐபிஎல் கூட்டத்தில் குறைந்தபட்சம் ஏழு வீரர்களை தக்க வைத்தல், இந்த ஏழு வீரர்களில் எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் இந்திய வீரர்களாகவோ அல்லது வெளிநாட்டு வீரர்களாகவோ தக்க வைத்தல், ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மிகா ஏலம், மேலும் தக்க வைக்கும் வீரர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவற்றுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டு இருக்கிறார். இவருடைய பேச்சு இந்த ஐபிஎல் கூட்டத்தில் பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது என்று கூறப்படுகிறது!

- Advertisement -