எங்கள் அணிக்குள் அந்த மோசமான வைரஸ் பரவி விட்டது.. அந்த பையனை பார்த்தாலே பாவமா இருக்கு – ரிக்கி பாண்டிங் கருத்து

0
49
Ponting

தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிடுவது ஒரு பெரிய தொற்று நோயாக பரவி வருகிறது. இதுகுறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார்.

நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மட்டும் ஆரம்பத்திலேயே நான்கு கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டார்கள். இதன் காரணமாக போட்டியையும் தோற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

- Advertisement -

உருவாக்கிய வீரர்

தற்போது பஞ்சாப் கிங்ஸ் கேட்ச் வாய்ப்புகளை இழந்து வருவதை முதலில் ஷஷான்க் சிங் ஆரம்பித்து வைத்தார். இது கொஞ்சம் கொஞ்சமாக அந்த அணிக்குள் பரவி எல்லோரும் தொடர்ந்து கேட்ச் வாய்ப்புகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்றும் அவர் ஒரு கேட்ச் வாய்ப்பை விட்டார்.

இந்த நிலையில் நேற்று போட்டியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே ரிக்கி பாண்டிங் பேட்டிங் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு இடையிலேயே மட்டும் பஞ்சாப் கிங்ஸ் இரண்டு கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டது. இதுகுறித்து அவர் தனது கோபத்தை நகைச்சுவையான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

வைரஸ் தொற்று போல மாறிவிட்டது

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “உண்மையைச் சொல்லப்போனால் கேட்ச் விடுவது ஒரு வைரஸ் தொற்று போல எங்கள் அணிக்குள் பரவி விட்டது. இதுவரையில் இந்த சீசனில் நாங்கள் நிறைய கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டிருக்கிறோம். வீரர்கள் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கான பலன் களத்தில் கிடைக்காமல் இருந்து வருகிறது”

இதையும் படிங்க: மோசமான அந்த தப்புகளை செய்றோம்.. தொடர்ந்து மூன்று தோல்வி.. எங்க பிரச்சனையே இதுவா மாறிடுச்சு – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

“எங்கள் பையன் ஷஷான்க் சிங்கை பார்ப்பதற்கே எனக்கு பாவமாக இருக்கிறது. அவன் எங்கு போய் நின்றாலும் பந்து அவனை துரத்திக் கொண்டு செல்கிறது. அவனும் பந்து வானத்தில் உயர்ந்ததும் கீழிருந்து கூர்ந்து கவனித்து பார்க்கிறான் ஆனால் தவற விட்டு விடுகிறான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -