ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி விளையாடினார்.
இதில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் கொல்கத்தா மோதல்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய டீ காக் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தொடக்கத்திலேயே ஆட்டம் இழந்தனர். டிகாக் 1 ரன்னில் வெளியேற, சுனில் நரேன் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு கேப்டன் ரகானே மற்றும் இளம் வீரர் ரகுவன்சி ஆகியோர் ஜோடி சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 51 பந்துகளில் 81 ரன்கள் குவித்தர்.
கேப்டன் ரகானே 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் ரகுவன்ஷி சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அதற்குப் பின்னர் கடந்த மூன்று போட்டிகளில் தடுமாறிய வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 60 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் 17 பந்துகளில் 32 ரன்கள் குவிக்க கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.
கேகேஆர் சாதனை வெற்றி
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சன் ரைசர்ஸ் களம் இறங்கியது. வழக்கம் போலவே இந்த முறையும் சன்ரைசர்ஸ் அணியின் முதல் மூன்று வீரர்கள் தடுமாறினார்கள். டிராவிஸ் ஹெட் 4 ரன், அபிஷேக் ஷர்மா 2 மற்றும் இஷாந்த் கிஷான் 2 ரன்னில் வெளியேற, சன்ரைசர்ஸ் அணி திரும்பவும் சிக்கலில் மாட்டிக்கொண்டது. அதற்குப் பின்னர் நிதிஷ்குமார் 19 ரன் மற்றும் கமிந்து மென்டிஸ் 27 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
இதையும் படிங்க:18 வருட ஐபிஎல் வரலாறு.. முதல் வீரராக விசித்திர சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்.. ரசிகர்கள் பாராட்டு
அதற்குப் பின்னர் சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதிகபட்சமாக மிடில் வரிசையில் களமிறங்கிய கிளாஸன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியாக சன் ரைசர்ஸ் அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை வைபவ் அரோரா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்திய சுனில் நரேன் கொல்கத்தா அணிக்காக 200 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் இது கொல்கத்தா அணிக்கு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 20வது வெற்றியாக அமைந்துள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக கேகேஆர் இந்த அணிக்கு எதிராக வெற்றி வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.






