இன்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்த விதம் குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் டிராவீஸ் ஹெட் 28 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 47 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னால் வந்த வீரர்களில் மிடில் வரிசை ஆட்டக்காரர் அங்கித் வர்மா 13 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். லக்னோ அணியை பொறுத்தவரை சர்துல் தாகூர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
அதற்குப் பின்னர் களமிறங்கிய லக்னோ அணி, மூன்றாவது வரிசை வீரர் நிக்கோலஸ் பூரானின் அதிரடியான ஆட்டத்தால் 23 பந்துகள் மீதம் வைத்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. 26 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட பூரான் 6 போர் மற்றும் 6 சிக்ஸ் என 70 ரன்கள் குவித்தார். பின்னர் மிடில் வரிசையில் களமிறங்கிய அப்துல் சமாத் 8 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 22 ரன்கள் குவித்து லக்னோ அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் லக்னோ அணி 193 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றி பெற்றது.
இந்த தோல்விக்கு பிறகு பேசிய லக்னோ அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ” இந்த ஆடுகளம் இந்த போட்டியில் வித்தியாசமாக காணப்பட்டது. லக்னோ அணி இந்த போட்டியில் நன்றாக பேட்டிங் செய்தது. இது ஒரு நல்ல பேட்டிங் ஆடுகளம். உலகத்தின் இரண்டாவது சிறந்த ஆடுகளம் இதுவாகும். ஆனால் இந்த ஆட்டத்தில் ஆடுகளம் சற்று மெதுவாக காணப்பட்டது. ஒவ்வொரு முறையும் அவர்கள் நன்றாக திட்டமிட்டு மிகவும் சிறப்பான முறையில் பந்து வீசினார்கள். அதுதான் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:சன்ரைசர்ஸ்க்கு ஷாக் கொடுத்த லக்னோ.. ருத்ர தாண்டவம் ஆடிய பூரன்.. 23 பந்துகள் மீதம் வைத்து லக்னோ சிறப்பான வெற்றி
190 ரன்கள் எட்டுவதற்கு இது ஒரு நல்ல முயற்சி. இசான் கிசான் முதல் போட்டியில் செய்ததைப் போல கடைசிவரை எடுத்துச் செல்லக் கூடிய ஒரு நபர் தேவை. இந்த போட்டியில் அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள். எங்களை ஒருபோதும் விட்டுவிடவில்லை. எங்களுக்கு 8 பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் அது வெளியே எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்க வேண்டும். நீங்கள் சிறப்பாக செய்திருக்கக் கூடிய விஷயங்களை பார்க்கிறீர்கள். அதுதான் இந்த போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இது ஒரு நீண்ட போட்டித் தொடர் என்பதால் எங்களுக்கு மீண்டும் முன்னேற ஒரு வாய்ப்பு கிடைக்கும்” என்று அவர் கூறியிருக்கிறார்.