பவர் ஹிட்டர்ஸ் வச்சு ஒரு பயனும் இல்ல.. எங்க பேட்டிங் வரிசையில் இதை செய்யக்கூடிய ஆள் இல்லை – கம்மின்ஸ் வருத்தம்

0
377

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணி தோல்வி அடைந்த விதம் குறித்து அதன் கேப்டன் பேட் கம்மின்ஸ் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 143 ரன்கள் குவித்தது. அந்த அணியை பொறுத்தவரை மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசின் அதிரடியாக விளையாடி 44 பந்துகளை எதிர் கொண்டு 71 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் மிடில் வரிசை வீரர் அபிநவ் மனோகர் 37 பந்துகளை எதிர் கொண்டு 43 ரன்கள் குவித்து வெளியேறினார். மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய போல்ட் நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெடுகள் கைப்பற்றினார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி மும்பை அணிக்களம் இறங்கிய நிலையில் கடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா இந்த முறையும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 46 பந்துகளை எதிர்கொண்டு 8 ஃபோர் மற்றும் 3 சிக்ஸ் என 70 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்த நிலையில் இறுதியில் சூரியகுமார் யாதவ் 19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 40 ரன்கள் குவித்தார் இதில் 5 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் அடங்கும். இதன் மூலமாக மும்பை அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

- Advertisement -

தோல்விக்கான காரணம் குறித்து கம்மின்ஸ்

தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் கூறும் போது ” அபினவ் மற்றும் கிளாசி ஆகியோர் நல்ல நிலையில் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் இந்த இன்னிங்ஸ் எங்களால் கடக்க முடியவில்லை. உண்மையில் போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்லக்கூடிய ஒரு வீரர் தேவை. இந்த ஆடுகளத்தில் நீங்கள் உங்கள் இன்னிங்சை உருவாக்க வேண்டும். அதற்கு ஒரு சில பந்துகளை நீங்கள் பொறுமையாக எதிர்கொண்டு விளையாடினால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். இந்த ஐபிஎல் தொடரில் எங்கள் முதல் போட்டியில் நாங்கள் 280 ரன்கள் குவித்ததற்கும், தற்போது இதே மைதானத்தில் நாங்கள் சுருண்டு விழுந்ததற்கும் இருக்கின்ற வித்தியாசத்தை பார்க்கலாம்.

இதையும் படிங்க:திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. டாப் 4ல் நுழைந்த மும்பை அணி.. ஹிட்மேன் ரோஹித் அபார ஆட்டம்.. 7 விக்கெட்டில் சன்ரைசர்சை வீழ்த்தி வெற்றி

டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை கொடுக்கப்படும் நேரம் என்பது மிக குறைவு. எனவே நீங்கள் இதற்கு தகுந்தவாறு தான் நீங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நாங்கள் முன்னேறிச் செல்லக்கூடிய பாதையில் இப்போது எங்களுக்கு எங்கள் மைதானத்தை தவிர வெளியே அதிக ஆட்டங்கள் உள்ளன. எனவே எதைப் பற்றியும் கவனத்தில் கொள்ளாமல் அந்த ஆடுகளத்தின் தன்மையை விரைவாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். அது சில நாட்களில் ஆல் அவுட் ஆகக்கூடிய வகையிலும் சில நாட்களில் நாங்கள் விரும்பிய வகையில் செயல்படக்கூடிய வகையிலும் இருக்கும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -