நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
மும்பை ஐதராபாத் மோதல்
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசை இழந்த சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் வெளியேற, அந்த அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாஸன் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள்.
இதில் கிளாசன் 44 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 71 ரன்கள் குவித்த நிலையில் பும்ராவின் பந்துவீச்சில் வெளியேறினார். அபினவ் மனோகர் 37 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். மும்பை அணித்தரப்பில் சிறப்பாக பந்து வீசிய போல்ட் 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மும்பை இந்தியன்ஸ் சிறப்பான வெற்றி
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. மும்பை அணியின் தொடக்க வீரர் ரிக்கல்டன் 11 ரன்னில் ஆட்டம் இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் வில் ஜாக்ஸ் கூட்டணி சிறப்பாக விளையாடியது. இதில் வில் ஜாக்ஸ் 22 ரன்னில் வெளியேற, தொடக்க வீரர் ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை விளையாடி 46 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர் என 70 ரன்கள் குவித்து இறுதியில் ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க:டி20 கிரிக்கெட்டில் ஹிட்மேன் படைத்த ரெக்கார்டு.. 2வது இந்திய வீரராக அபார சாதனை.. கெயிலுடன் டாப் லிஸ்டில் இணைந்தார்.. முழு விபரம்
அதற்குப் பின்னர் சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி மும்பை அணியை வெற்றி பெற வைத்தது. இதில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 19 பந்துகளில் 5 போர் மற்றும் 2 சிக்ஸ் என 40 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். மும்பை அணிக்கு இது தொடர்ச்சியான நான்காவது வெற்றியாக அமைந்துள்ளது. புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.