ஒரு கேப்டனா என் மேலயும் தப்பு இருக்கு.. 2 விஷயத்தில் கோட்டை விட்டோம்.. தோல்விக்கான காரணம் குறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ்

0
180

நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை தோற்கடித்தது.

இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சில முக்கிய கருத்துக்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணி தோல்வி

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. குஜராத் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் சுப்மான் கில் 38 பந்துகளை எதிர் கொண்டு 10 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 76 ரன்கள் குவித்தார். அவருக்கு பின்னர் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய ஜாஸ் பட்லர் 37 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா ஒரு முனையில் நிலையாக நின்று விளையாட, மற்றவர்கள் யாரும் அவருக்கு சரியான ஒத்துழைப்பு தராததால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே குவித்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

- Advertisement -

இரண்டு விஷயங்கள் கோட்டை விட்டோம்

இந்த தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறும்போது “இந்த போட்டியை பொறுத்தவரை இரண்டு முக்கிய விஷயங்கள் கோட்டை விட்டோம். பவர் பிளேவில் எங்களது பேட்டிங் சிறப்பானதாக இல்லை. நானும் அப்போது ஒரு குற்றவாளியாக இருந்தேன். மேலும் இந்த போட்டியில் அவர்கள் 20 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருக்கலாம். அப்போது எங்களுக்கு கிடைத்த இரண்டு அல்லது மூன்று பேட்ச் வாய்ப்புகளை தவற விட்டோம். அந்த சமயத்தில் நானும் ஒரு கேட்ச் தவற விட்டது அணிக்கு பாதிப்பாகவே அமைந்தது. 200 ரன்கள் இலக்கை துரத்துவது சற்று யதார்த்தமாக இருந்தது. குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் தரமான வீரர்கள்.

இதையும் படிங்க:இது தவறுதலா நடந்த விஷயம்.. தயவு செஞ்சு யாரும் பெரிது படுத்தாதீங்க.. பாலிவுட் நடிகை புகைப்பட சர்ச்சைக்கு கோலி பதில்

அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் அசாதாரணமாக செய்ய மாட்டார்கள். நீங்கள் ஒருவேளை மோசமாக பந்து வீசினால் அவர்கள் அதை கண்டிக்க தவற மாட்டார்கள். நாங்கள் நிறைய மோசமான பந்துகளை வீசி இருக்கலாம். இது உண்மையிலேயே அருமையான பேட்டிங் விக்கெட் ஆகும். கடைசி 14 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்தது பந்துவீச்சு பகுதியில் சிறப்பானதாக இருந்தது. இந்த போட்டி எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்றது ஒரு மெகா ஏலம். இதன் மையக்கரு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நடைபெறும். எனவே இன்னும் விளையாட நிறைய இருக்கிறது. எனவே நாங்கள் விரைவாக வெற்றி பாதைக்கு திரும்புவோம்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -