இது தவறுதலா நடந்த விஷயம்.. தயவு செஞ்சு யாரும் பெரிது படுத்தாதீங்க.. பாலிவுட் நடிகை புகைப்பட சர்ச்சைக்கு கோலி பதில்

0
204

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் டாப் லிஸ்டில் இருக்கும் நிலையில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி தவறுதலாக சமூக வலைதளத்தில் செய்த நிகழ்வுக்கு உரிய விளக்கத்தை தற்போது பதிவிட்டு இருக்கிறார்.

- Advertisement -

லைக் செய்த விராத் கோலி

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பான முறையில் விளையாடி 10 போட்டிகளில் ஏழு போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நாளை மோத இருக்கும் நிலையில் நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் பெங்களூர் அணி மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

இந்த சூழ்நிலையில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் விராட் கோலி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கால்பந்து பிரபலம் ரொனால்டோவுக்கு அடுத்து அதிக அளவு ரசிகர்களை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி பாலிவுட் நடிகையான அவ்னீத் கவுரின் புகைப்படத்திற்கு லைக் செய்து விட்டார் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அதனை அதிக அளவு பகிர்ந்தும், விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மாவின் பெயரை அந்தப் பதிவில் குறிப்பிட்டு வேகமாக பகிர்ந்து வந்தனர்.

- Advertisement -

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி

இந்த சூழ்நிலையில் இது உடனடியாக வைரலானதை உணர்ந்த விராட் கோலி அதற்கு பதில் அளிக்கும் விதமாக, இது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு விஷயம் இல்லை எனவும் தவறுதலாக நடைபெற்ற நிகழ்வு என்றும் இதனை யாரும் பெரிது படுத்த வேண்டாம் என அதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவினை வெளியிட்டு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சிறிது நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த செய்தி, விராட் கோலி தலையிட்ட உடன் முடிவுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க:48 ரன்கள்.. டி20 கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த தமிழக விராட் கோலி.. ஐபிஎல் 2025.. GT vs SRH

இதுகுறித்து பதிவு வெளியிட்ட விராட் கோலி “எனது சமூக வலைதளத்தில் உள்ள தேவையற்ற தரவுகளை அழித்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக இந்த நிகழ்வு நடைபெற்று இருக்கலாம் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். இதற்குப் பின்னால் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது. எனவே இந்த விஷயத்தில் எதுவும் தேவையில்லாத வகையில் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என விராட் கோலி ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். நாளை நடைபெற உள்ள போட்டியில் சென்னை அணியை எதிர்த்து பெங்களூர் அணி விளையாட உள்ள நிலையில் தொடர் தோல்விகளுக்கு சிஎஸ்கே முற்றுப்புள்ளி கொடுத்து நாளை வெற்றி பெறுமா? அல்லது ஆர்சிபி அணியின் வெற்றி வேட்டை தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -