டெல்லி போட்டியில் சுவாரசியம்.. ஐபிஎல் உலகில் முதல் கேப்டனாக கம்மின்ஸ் படைத்த 2 அற்புத சாதனைகள்.. DC vs SRH.. ஐபிஎல் 2025

0
254

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இரண்டு சிறப்பான சாதனைகள் படைத்திருக்கிறார்.

- Advertisement -

டெல்லி சன்ரைசர்ஸ் மோதல்

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி டெல்லி அணியின் துவக்க வீரர்களாக கருண் நாயர் மற்றும் அபிஷேக் பொரேல் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் தனது முதல் ஓவரை வீசிய பேட் கம்மின்ஸ் முதல் பந்தியிலேயே கருண் நாயரின் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.

அதற்குப் பின்னர் 8 பந்துகள் விளையாடிய பாப் டு பிளசிஸ் 3 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அதற்குப் பின்னர் அபிஷேக் பொரேல் 10 பந்துகளை எதிர்கொண்டு விளையாடிய நிலையில் 8 ரன்னோடு மீண்டும் கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேற, பவர் பிளேவிற்குள் டெல்லி அணி மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அதற்குப் பின்னர் கே.எல் ராகுல் 10 ரன், அக்சார் பட்டேல் 6 ரன் என வெளியேறினாலும் ஸ்டெப்ஸ் மற்றும் அசுத்தோஸ் சர்மா சிறப்பாக விளையாடி ஓரளவு அணியை மீட்டார்கள்.

- Advertisement -

கம்மின்ஸ் படைத்த 2 சாதனைகள்

இதில் குறிப்பாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முக்கியமான சாதனைகள் படைத்திருக்கிறார். அதாவது இன்னிங்ஸ் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டன் என்கிற பெருமையும், பவர் பிளேவிற்குள் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் கேப்டன் என்கிற சாதனையையும் படைத்திருக்கிறார். மொத்தமாக நான்கு ஓவர்கள் வீசிய கம்மின்ஸ் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையும் படிங்க:ரிஷப் பண்ட்க்கு இந்த திறமை கிடையாது.. இதை ஏத்துக்காதனால மோசமான ஃபார்ம்ல இருக்காரு.. சிஎஸ்கே முன்னாள் வீரர் விமர்சனம்

இதனால் இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் குவித்தது. இதில் சிறப்பாக விளையாடிய ஸ்டெப்ஸ் 36 பந்துகளில் 41 ரன்கள் மற்றும் அசுதோஷ் சர்மா 26 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 41 ரன்கள் குவித்தார். முதல் இன்னிங்ஸ் முடிவடைந்த நிலையில் மழை காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெறுமா? அல்லது மழையால் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்படுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -