சொந்த மண்ணில் வரலாற்று தோல்வி அடைந்த சிஎஸ்கே.. கமிந்து மெண்டிஸ் அசத்தல்.. ஆறுதல் அளித்த ப்ரெவிஸ்.. 5 விக்கெட்டில் சன்ரைசர்ஸ் வெற்றி

0
188

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 43-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

இதில் சிறப்பாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

சன்ரைசர்ஸ் சிஎஸ்கே மோதல்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டெவால்ட் ப்ரெவிஸ் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்றார். மற்றொரு மாற்றமாக ஜேமி ஓவர்டனுக்கு பதிலாக சாம் கரன் உள்ளே கொண்டுவரப்பட்டார். சூழ்நிலையில் டாசை இழந்த சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. அணியின் தொடக்க வீரர் ஷேக் ரசீது டக் அவுட் ஆகி வெளியேற, மூன்றாவது வரிசை வீரர் சாம் கரண் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

அதற்குப் பிறகு களம் இறங்கிய ப்ரவிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 42 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 154 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை ஹர்சால் பட்டேல் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

சிஎஸ்கே வரலாற்று தோல்வி

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா கலீல் அகமது பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேற, ஓரளவு பொறுப்பாக விளையாடிய ஹெட் 16 பந்துகளை எதிர் கொண்டு 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இசான் கிசான் 34 பந்துகளை எதிர் கொண்டு 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 44 ரன்கள் குவித்து சாம் கரணின் அற்புதமான கேட்ச் ஆல் வெளியேற்றப்பட்டார். இடையில் கிளாசன் 7 ரன் மற்றும் அணிக்கேத் வர்மா 19 ரன்னில் ஆட்டம் இழக்க போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இதையும் படிங்க:விராட் கோலியின் அந்த விஷயத்தை பேச நான் மிகவும் சிறியவன்.. அவருக்குள்ள ஏதோ ஒன்னு இருக்கு – தினேஷ் கார்த்திக் பேட்டி

இறுதியில் பொறுப்பாக விளையாடிய கமிந்து மென்டிஸ் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் சன்ரைசர்ஸ் அணியை வெற்றி பெற வைத்தனர். வெங்கடேஷ் 32 ரன்கள் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி 19 ரன்கள் குவிக்க, சன்ரைசர்ஸ் 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக சிஎஸ்கே சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக முதல் முறை தோல்வியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவி இருக்கிறது.

- Advertisement -