விராட் கோலியின் அந்த விஷயத்தை பேச நான் மிகவும் சிறியவன்.. அவருக்குள்ள ஏதோ ஒன்னு இருக்கு – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
238

நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் பெங்களூர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகருமான தினேஷ் கார்த்திக் விராட் கோலி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி குறித்து தினேஷ் கார்த்திக்

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. சின்னசாமி ஆடுகளம் சற்று மெதுவாக காணப்பட்டதால் இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்ட விராட் கோலி, 71 ரன்கள் குவித்து பெங்களூர் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே குவித்தது.

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த விராட் கோலி கடந்த 2024 ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்று விட்டார். இருப்பினும் அவரது டி20 அணுகுமுறை மிகவும் அட்டகாசமான முறையில் இருந்து வருகிறது. விராட் கோலி அவசரப்பட்டு ஓய்வு பெற்று விட்டார் என சுரேஷ் ரெய்னா முதற்கொண்டு பல வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக் விராட் கோலி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

நான் அதைப் பேச மிகவும் சிறியவன்

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் போது “18 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவது என்பது ஒரு விஷயம், ஆனால் இத்தனை வருடங்கள் நிலையாக இருப்பது என்பது வேறு விஷயமாகும். அது அந்த மனிதரைப் பற்றி நிறைய சொல்கிறது. அவர் தனது மன உறுதியில் உறுதியாக இருக்கிறார். பெங்களூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் பெங்களூர் ஆடுகளத்தை நன்றாக உணர்ந்தார். இரண்டு விஷயங்களை கூறினார்.

இதையும் படிங்க:அஸ்வின்-அன்சூல்-ஹூடா.. இந்த சாதாரண விஷயம் கூட தெரியாதா.. தோனி பிளமிங் எதுக்கு இருக்கீங்க? – சிஎஸ்கே ரசிகர்கள் கோபம்

ஒன்று அந்த ஆடுகளத்தின் தன்மை குறித்து நன்றாக யோசித்து இருக்கலாம். மற்றொன்று அவர் ரசிகர்களை நன்றாக உணர்ந்தார். அவர் அதை எப்படி பார்க்கிறார் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அவர் விளையாடுவதை பார்க்க நிறைய பேர் வருகிறார்கள் என்பதும் அவருக்கு தெரியும். அவர் அதை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் நன்றாக உணர்ந்தார் என்பதை பார்க்கலாம். அந்த மனிதன் ஏதோ ஒரு விஷயத்தில் தன் மனதை செலுத்துகிறார். விஷயங்களை நன்றாக புரிந்து கொள்கிறார். அதைப்பற்றி பேசக்கூட நான் மிகவும் சிறியவன். அவர் ஒரு முழுமையான சாம்பியன் வீரர்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -