இந்திய கிரிக்கெட்

ஆர்சிபி-ன் ஸ்பெஷல் பிளான்.. சிக்கிக்கொண்ட ஹைதராபாத்.. மீட்டெடுத்த இஷான் மற்றும் இளம் இந்திய வீரர்

இன்று 19ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்ட போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் அதிரடி ஆட்டக்காரர்களைக் கொண்ட ஹைதராபாத் அணிக்கு எதிராக சிறப்பு பந்து வீச்சு திட்டத்துடன் வந்த ஆர்சிபி அசத்தலாக ஹைதராபாத் அணியை கட்டுப்படுத்தியது.

ஆர்சிபி பிளான்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த டிராவிஸ் ஹெட் 9 பந்துகளில் 11 ரன்கள், அபிஷேக் ஷர்மா 8 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இந்த இருவருக்குமே உடலுக்குள் பந்தை வீசும் திட்டத்தை ஆர்சிபி கொண்டு வந்தது. இதன் காரணமாக இருவராலும் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறினார்கள். கடைசியில் அப்படியான பந்தில் டப்பி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

கலக்கிய உள்நாட்டு வீரர்

இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் இஷான் கிஷான் 38 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 80 ரன்கள் குவித்தார். இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஹென்றி கிளாசன் 22 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் கோப்பை எங்களுக்கே.. 2வது ஸ்டார் ஜெர்சியில் ஏறும்.. இந்த பையனுக்கு வாய்ப்பு தரோம் – படிதார் பேச்சு

இந்த நிலையில் ஐதராபாத் அணி 200 ரன்கள் எடுக்குமா? என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் இந்திய உள்நாட்டு வீரர் அன்கீத் வர்மா அதிரடியாக 18 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 43 ரன்கள் எடுத்தார். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. ஆர் சி பி அணியின் தரப்பில் டஃபி மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -
Published by