4 ஓவர் 25 ரன் 4 விக்கெட்.. சிஎஸ்கே வீரர் அசத்தல் பவுலிங் .. 58 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் முதல் வெற்றி

0
200

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதி விளையாடின.

இதில் சன்ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 58 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் அணியை தோற்கடித்தது.

- Advertisement -

எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக்

டர்பனில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பெடிங்கம் மற்றும் ஜாக்ராவ்லி ஆகியோர் களமிறங்கினார்கள். பெடிங்கம் 10 ரன்னில் வெளியேற மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய அபெல் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். 39 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 5 பவுண்டரிகளோடு சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 57 ரன்கள் குவித்தார்.

இவரோடு பார்ட்னர்ஷிப் அமைத்த ஜாக்ராவ்லி 29 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு இறுதிக் கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்கோ ஜான்சன் 26 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 36 ரன்கள் குவிக்க, சன்ரைசர்ஸ் அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. இதில் பந்துவீச்சில் நூர் அகமது நான்கு ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணி அசத்தல் வெற்றி

இவர் அடுத்த ஐபிஎல் சீசன் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களம் இறங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி டர்பன் அணி களம் இறங்கியது. டர்பன் அணிக்கு பிரீக் மற்றும் பார்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவர்களில் 40 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் பிரீக் 21 ரன்னில் வெளியேற, மற்றொரு பேட்ஸ்மேன் பார்சன் 23 ரன்னில் வெளியேறினார். அதற்குப் பின்னர் வந்த வீரர்களில் யாருமே நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை.

இதையும் படிங்க:உள்நாட்டு கிரிக்கெட் வேண்டாம்.. அந்த ஜாம்பவான் மாதிரி விராட் கோலி இத செஞ்சா போதும் – சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து

இதில் நட்சத்திர வீரர்களான டிகாக் 21 ரன் மற்றும் மல்டர் 22 ரன் அடித்து வெளியேற மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 18.1வரில் டர்பன் அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை தோல்விப்பாதையிலேயே இருந்த சன்ரைசர்ஸ் அணி தற்போது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் டர்பன் அணி தோற்றாலும் பந்துவீச்சில் கலக்கிய நூற் அகமது ஆட்டநாயகன் விருது பெற்றார்.

- Advertisement -