எனக்கே பயமா இருந்துச்சு.. இந்த மேட்ச் மூலமா.. என் முடிவு இனி இதுதான் – பேட் கம்மின்ஸ் பேட்டி

0
2358

18வது ஐபிஎல் கிரிக்கெட் இரண்டாவது ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் சிறப்பாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வெற்றி பெற்றது குறித்து சில முக்கிய கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இதில் அபாரமாக விளையாடிய மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் இசான் கிசான் அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 47 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 106 ரன்கள் குவித்தார். அவருக்குப் பிறகு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 67 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. சஞ்சு சாம்சனை தவிர டாப் 3 பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். சஞ்சு சாம்சன் 37 பந்துகளில் 66 ரன்கள், மிடில் வரிசை பேட்ஸ்மேன் துருவ் ஜூரேல் 35 பந்துகளில் 70 ரன்கள் குவித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டம் இழந்ததால் ராஜஸ்தான் அணியால் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் மட்டுமே குவித்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

என்னால் நம்பவே முடியவில்லை

சன்ரைசர்ஸ் அணியின் வெற்றி குறித்து கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் போது ” நான் நிச்சயமாக எங்கள் வீரர்களுக்கு பந்து வீசுவதை நான் விரும்ப மாட்டேன். நம்பவே முடியவில்லை 280 ரன்கள் குவித்தோம். இது நிச்சயம் பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும் என்று நன்றாகவே தெரியும். ஆனால் இவ்வளவு பெரிய ரன்கள் குவித்த போது ஒரு ஓவரில் வெற்றி பெற வைக்க முடியும். குறிப்பாக எங்கள் அணியின் மையத்தை ஒருங்கிணைப்பாக வைத்திருக்க முடிந்தது. இசான் கிஷானின் இன்றைய ஆட்டம் மிகவும் அபாரமானதாக இருந்தது.

இதையும் படிங்க:528 ரன்.. 2 அணிகளும் ரன் மழை.. இஷான் கிஷான் சாம்சன் அபாரம்.. 44 ரன்னில் ராஜஸ்தானை வீழ்த்தி சன்ரைசர்ஸ் வெற்றி

நாங்கள் இந்த தொடரில் சுதந்திரமாக விளையாட முயற்சி செய்கிறோம். எங்களின் தயாரிப்பு அற்புதமாக இருந்தது. அற்புதமான பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வருடம் முழுவதும் எப்படி விளையாட வேண்டும் என்று ஒரு ப்ளூ பிரிண்ட் வைத்திருக்கிறோம்” என்று கம்மின்ஸ் கூறி இருக்கிறார். முதல் போட்டியிலேயே சன்ரைசர்ஸ் அணி தங்களது அதிரடியை துவக்கி வைத்திருக்கும் நிலையில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

- Advertisement -