17 வருட வரலாறு.. சுனில் நரைன் மெகா ரெக்கார்ட்.. இனி யாரும் செய்வதற்கு கடினமான சாதனை

0
2259
Narine

நடப்பு ஐபிஎல் தொடரை வெல்லும் நிலையில் கொல்கத்தா அணி தற்பொழுது இறுதிப் போட்டியில் வலிமையான நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் சுனில் நரேன் அடுத்து யாரும் செய்வதற்கு மிகக் கடினமான ஒரு சாதனையை படைத்திருக்கிறார்.

கொல்கத்தா அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அந்த அணிக்கு இந்த ஆண்டு மென்டராக வந்த பிறகு சில முக்கிய மாற்றங்களை செய்தார். அதில் சுனில் நரைனை மீண்டும் துவக்க ஆட்டக்காரராக கொண்டு வந்தது மிக முக்கிய முடிவாக அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆனால் அவர்களுடைய பேட்டிங் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு அவர்களை வெறும் 113 ரன்களுக்கு 18.3 ஓவரில் ஆல் அவுட் செய்தார்கள்.

இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் ரசல் மூன்று விக்கெட்டுகள், ஹர்ஷித் ராணா மற்றும் ஸ்டார்க் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா மற்றும் சுனில் நரைன் மூவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்தப் போட்டியில் தனது கடைசி ஓவரில் உனட்கட் விக்கெட்டை சுனில் கைப்பற்றிய பொழுது, நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் பந்து வீசிய எல்லா போட்டிகளிலும் விக்கெட்டை கைப்பற்றிய நிகழ்வு நடந்தது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 15 போட்டிகளில் அவர் 17 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் ஓவருக்கு அவர் 6.57 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் பைனலில் மோசமான சாதனை.. சொல்லி வைத்து கொல்கத்தா பவுலர்கள் கலக்கல்

மேலும் மொத்தம் 15 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 482 ரன்கள் குவித்து இருக்கிறார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகப் பிரமாதமாக 179 என்று இருக்கிறது. ஒரு ஐபிஎல் தொடரில் பத்துக்கும் மேற்பட்ட மற்றும் பந்து வீசிய எல்லா போட்டிகளிலும் விக்கெட் கைப்பற்றி, 450-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த ஒரே வீரராக ஐபிஎல் வரலாற்றில் சுனில் நரைன் பெயர் பதிவாகி இருக்கிறது. எதிர்காலத்தில் பேட்டிங் பௌலிங் என இரண்டு துறைகளிலும் யாராவது ஒருவர் இப்படியான சாதனையை செய்வது கடினமான ஒன்றாக இருக்கும். மேலும் அவர் பந்து வீசிய எல்லா போட்டிகளிலும் கிரிக்கெட் கைப்பற்ற வேண்டிய தேவையும் இருக்கும். எனவே சுனில் நரைனின் இந்த சாதனை உடைப்பதற்கு மிகவும் கடினமானது என்பது குறிப்பிடத்தக்கது!